வாழும் வழி எது தெரியுமா .?- மகாகவி பாரதியின் பதில்
மகாகவி பாரதி தனது பாப்பா பாட்டில் " உண்மை தான் தெய்வம்" என்பதை உணரவேண்டும் என்கிறான் .
ஓதிடும் தெய்வங்கள் எல்லாம் பொய் . உண்மையே தெய்வம் என்று கீழ்கண்ட கவிதை வரிகளில் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்
"உண்ம்மையின் பேர் தெய்வம் என்போம் - மற்று
ஓதிடும் தெய்வங்கள் பொய் எனக் கண்டோம் "
தான் கண்டு உணர்ந்தவற்றையே குழந்தைப் பாப்பாவிற்கும் மகாகவி சொல்வதை இங்கு காணலாம் .
மனித குல வாழ்வில் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் வந்து செல்லக் கூடியவை ; தவிர்க்கமுடியாதவை .எனவே அவற்றை எதிகொள்ளும் துணிச்சலை வைரமுடையே நெஞ்சே தரும் . எனவே குழந்தை பருவத்திலேயே வாழ்வின் எதார்த்தத்தை அவர்களுக்கு புரிய வைக்கிறான் .
வாழும் வழி எது தெரியுமா .உண்மையை தெய்வம் என்று உணர்வதும், எல்லாவற்றையும் எதிர்கொள்ள நெஞ்சை வலிமையாக வைத்திருப்பதும் தான் என்கிறான் பாரதி.
Bharathiyar quote |
No comments:
Post a Comment