மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, June 27, 2019

தனிப் பாடல்கள் - சொல் - உண்மை ஒளிர்க !-.....மகாகவி பாரதியார்- Bharathiyar songs Quotess

Bharathiyar Quotes
தனிப் பாடல்கள் - சொல்

உண்மை ஒளிர்க ! உண்மை ஒளிர்க!!

உண்மை ஒளிர்கஎன்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.

தீயை அகத்தினிடை மூட்டுவோம்”-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.
                                                   ......மகாகவி பாரதியார்



தனிப் பாடல்கள் -நிலாவும் வான்மீனும் காற்றும் (மனத்தை வாழ்த்துதல்) -.... மகாகவி பாரதியார்


Bharathiyar Quotes Songs 

தனிப் பாடல்கள் -நிலாவும் வான்மீனும் காற்றும்

(மனத்தை வாழ்த்துதல்)

உலாவும் மனச்சிறு புள்
 நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!
..... மகாகவி  பாரதியார் 





தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது-மகாகவி பாரதியார்- Bharathiyar Quotes songs


தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது1/2


செவ்விது ,செவ்விதுபெண்மை!
செவ்வொளி வானில் மறைந்தே- இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை இதழ்நகை வீச, -விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள் .
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!
                            ......மகாகவி பாரதியார்

குறிப்பு

கோணம் : அங்குசம்






தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது1/2

காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
காதலினால்  உயிர்  தோன்றும்;-இங்கு
காதலினால்  உயிர்  வீரத்தில் ஏறும் ;
காதலினால் அறிவு எய்தும் -இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலினால் அவள் கையைப் -பற்றி
அற்புதம் என்று இரு  கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோர்  பாட்டிசைத் திட்டாள்.
                                     ......மகாகவி பாரதியார்







தனிப் பாடல்கள்- சந்திரமதி -மகாகவி பாரதியார் - Bharathiyar Songs Quotes




        தனிப் பாடல்கள்-  சந்திரமதி 1/3


இருவிழிக்குத் தே நிலவு;
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!
..... மகாகவி பாரதியார்







                   தனிப் பாடல்கள்- சந்திரமதி 2/3

பெண்குலத்தின் வெற்றி யடி
பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!
..... மகாகவி பாரதியார் 







                    தனிப் பாடல்கள்- சந்திரமதி 3/3

ஞான வொளி வீசுதடி
நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி! 
..... மகாகவி பாரதியார்