மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, December 24, 2012

நர்ஸ்ஜெசிந்தா சல்தானாதற்கொலை சொல்லும் செய்தி

4 ஆண்டுகளாக லண்டனில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் பணி புரிந்து வந்த 46 வயதான நர்ஸ்ஜெசிந்தா சல்தானா வின் சொந்த ஊர் மங்களூர் . கணவன், 14 வயது மகள், 17 வயது மகனுடன் லண்டனில் உள்ள சவுத் பிரிஸ்டல் பகுதியில் வசித்து வந்தார். 
அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன? 
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்தி மிடில்டன் கர்ப்பம் தொடர்பான தகவல்களை எப்படியாவது சேகரித்து பரபரப்பை ஏற்படுத்த பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் சார்லஸ் பேசுவது போல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2டே பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் மெல் கிரெய்க் மற்றும் மிஷெய்ல் கிறிஸ்டியன் ஆகியோர் பேசிய ஒரு “ஏமாற்று தொலைபேசி அழைப்பு” தான் .ஊடகங்களின் ரெட்டிங் வெறி அநியாயமாக ஒரு நர்சின் உயிரை கொன்றுவிட்டது .அவரின் மரணம் சொல்லும் செய்தி என்ன? யோசிப்போம் . அம்மாதியான ஊடகங்களை தவிர்ப்போம்

A quote from "GLIMPSES OF WORLD HISTORY"

Never do anything in secret or anything that you wish to hide....JAWAHARLAL NEHRU in "GLIMPSES OF WORLD HISTORY" . It is one of the quotation I like most . I always try to follow . Tilll now my efforts are on to achieve it.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்
12.12.2012 -- சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்.அதற்கு முந்திய தினமே மதுரை நகர் சுவர்களில் வண்ணமய போஸ்டர்களும் ,அவற்றின் மீது கற்பனைக்கு எட்டாத வாசகங்களும் கண்டேன் . ஆனால் இவ்வளவு வெறியை ரசிகர்கள் மூளை மீது திணித்ததன் பெரும்பங்கு மீடியாக்களையே சாரும் .
நானும் ரஜினி ரசிகன் தான்..எண்பது தொன்னூறுகளில் ரஜினி படம் ஒன்றுகூட மிஸ் பண்ணியதில்லை. மானாமதுரையில் இருந்தபோதுமனைவியை கேரியரிலும் குழந்தைகளை ஹேண்டு பாரிலும் வைத்துக்கொண்டு ரஜினி படம் பார்க்க சைக்கிளில் சிட்டாகப் பறந்த என் கதை சுவாரஸ்யமானவை . நினைவுகளில் நிரம்பிப் கிடப்பவை ஏன் .தில்லுமுல்லு படத்தை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன் .
ஆனால் இப்ப ரசிகர்கள் பண்ணுவதெல்லாம் ஏனோ எனக்கு ரெம்ப ஓவராய் தெரியுது .

என்ன காரணம் தெரியல.நீங்களாவது சொல்லுங்க .

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

11.12.2012 -- மகாகவி பாரதியின் பிறந்தநாள் . 

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

தமிழால் பலர் பெருமை பெற்றனர் .
ஆனால் பாரதியால் தமிழ் பெருமைபெற்றது .
கடுந்தமிழ் பன்டிதர்களிடமிருந்து தமிழை மீட்டவன்.
பழம்பெருமை பேசிய பாவலர்களிடமிருந்து அவனால் தமிழ் மீண்டது .
புதுமையை வெறுத்த பாவாணர் களிடமிருந்து அவனால் தமிழ் வெளியேறி புதிய கற்றைச் சுவாசித்தது .
கவிதையா ! அது அறிவாளிகள் படித்து ரசிக்கத்தான் !என்ற மாயத்திரையை விலக்கியவன் பாரதி .
பாமரத் தமிழனையும் தமிழ்ச் சுவை அறியவைத்த புதுமைக்கவி .
எங்கள் தமிழ் மொழி ! எங்கள் தமிழ் மொழி ! என்று தமிழ் உணர்வு பொங்க ஓங்கி ஒலித்தவன்.
தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவ பேராசை கொண்டவன் .
வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர் !வாழிய பாரத மணித்திருநாடு !என்று முழங்கிய பாரதி ,
மொழி இனப் பற்றை மீறியவன் . தன் பாட்டுத்திறத்தாலே வையத்தை பாலிக்க நினைத்தவன் .
த்னி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் !
கொடுமை கண்டு கொதிநிலை அடைந்தவன் .
வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்தவன்
எனவேதான் ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சிஎன ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்த்தவன் .
உலகத்துக்கு ஓர் புதுமை இது எனப் பறை சற்றியவன் .
உலகம் முழுதும் அப்புரட்சி பரவ என்கி தவித்தவன்.
அவனது ஆசைக் கனவுகளாகவே உள்ளது .
பாரதி பிடித்த தேர் வடம்நடு வீதியில் கிடக்கிறது .
ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே !