மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, December 24, 2012

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

11.12.2012 -- மகாகவி பாரதியின் பிறந்தநாள் . 

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

தமிழால் பலர் பெருமை பெற்றனர் .
ஆனால் பாரதியால் தமிழ் பெருமைபெற்றது .
கடுந்தமிழ் பன்டிதர்களிடமிருந்து தமிழை மீட்டவன்.
பழம்பெருமை பேசிய பாவலர்களிடமிருந்து அவனால் தமிழ் மீண்டது .
புதுமையை வெறுத்த பாவாணர் களிடமிருந்து அவனால் தமிழ் வெளியேறி புதிய கற்றைச் சுவாசித்தது .
கவிதையா ! அது அறிவாளிகள் படித்து ரசிக்கத்தான் !என்ற மாயத்திரையை விலக்கியவன் பாரதி .
பாமரத் தமிழனையும் தமிழ்ச் சுவை அறியவைத்த புதுமைக்கவி .
எங்கள் தமிழ் மொழி ! எங்கள் தமிழ் மொழி ! என்று தமிழ் உணர்வு பொங்க ஓங்கி ஒலித்தவன்.
தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவ பேராசை கொண்டவன் .
வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர் !வாழிய பாரத மணித்திருநாடு !என்று முழங்கிய பாரதி ,
மொழி இனப் பற்றை மீறியவன் . தன் பாட்டுத்திறத்தாலே வையத்தை பாலிக்க நினைத்தவன் .
த்னி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் !
கொடுமை கண்டு கொதிநிலை அடைந்தவன் .
வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்தவன்
எனவேதான் ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சிஎன ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்த்தவன் .
உலகத்துக்கு ஓர் புதுமை இது எனப் பறை சற்றியவன் .
உலகம் முழுதும் அப்புரட்சி பரவ என்கி தவித்தவன்.
அவனது ஆசைக் கனவுகளாகவே உள்ளது .
பாரதி பிடித்த தேர் வடம்நடு வீதியில் கிடக்கிறது .
ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே !

No comments:

Post a Comment