மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, June 28, 2020

செந்தமிழ் நாட்டின் பெருமையும், தமிழர்களின் வீரமும் - மகாகவி பாரதியார்

செந்தமிழ் நாட்டின் பெருமையும், தமிழர்களின் வீரமும் - மகாகவி பாரதியார் 

            செந்தமிழ் நாடு -1/5

செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே -எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
.வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.

           












































           செந்தமிழ் நாடு-2/5

காவிரி தென்பெண்ணை பாலாறு -தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி -என
மேவி ஆறு பலவோடத் -திரு
மேனி செழித்த தமிழ்நாடு.(செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே -நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு -செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -அவை
யாவும் படைத்த தமிழ்நாடு




செந்தமிழ் நாடு--3/5


நீலத் திரைக்கடல் ஓ ரத்திலே -நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு


கல்வி சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.


செந்தமிழ் நாடு--4/5

வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் -மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.

சிங்களம் புட்பகம் சாவக -மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி -அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் -நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.






செந்தமிழ் நாடு--5/5           

விண்ணை யிடிக்கும் தலையிமயம் -எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் -சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார் -தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

சீன மிசிரம் யவனரகம் -இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் -மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.




Saturday, June 27, 2020

Quote by Mahatma Gandhi




A quote by Marcus Garvey


A quote I like most. We must know our roots. Unless we are aware of the history ,origin of our family  , the struggles of our early generations to reach a present level,  we will not have an idea how we have to improve further. We must see our roots and stand on our own legs . Then we will also become roots for our posterity 







Thursday, June 11, 2020

மனமே வீணே உழலுதல் வேண்டா - மகாகவி பாரதி


மனமே எனை வாழ்வித்திடுவாய் !
வீணே உழலுதல் வேண்டா !!

யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய்,
வாழ்ந்திட விரும்பினேன்;மனமே! நீயிதை
ஆழ்ந்து கருதி ஆய்ந் தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறி நான் சித்திபெற் றிடவே.
நின்னால்  இயன்ற துணைபுரி வாயேல்

              "விநாயகர் நான்குமணிமாலை"யில்
                         மகாகவி பாரதியார்

Mahakavi Bharathiyar poems
                      

Monday, June 08, 2020

பாரதி சொன்ன புதிய விதி எது தெரியுமா உங்களுக்கு


பாரதி சொன்ன புதிய விதி 
எது தெரியுமா உங்களுக்கு 

 இனியொரு விதி செய்வோம்-அதை
      எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்கு உணவிலை எனில்
      ஜகத்தினை அழித்திடு வோம்.
                             
                     ...மகாகவி பாரதியார்
Ini oru vithi seyvom -Mahakavi Bharathiyar 

 எங்கள் வாழ்வில் இவை இனி  இல்லை


மனிதர்  உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மில் அந்த
வாழ்க்கை இனியுண்டோ?


                      ..மகாகவி பாரதியார்

Manithar unavai manithar parikkum - Mahakavi Bharathiyar 

Sunday, June 07, 2020

மகாகவி பாரதியார் வசனக் கவிதை - காற்று -2


                    காற்றே வா
காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு,
மனத்தை  மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா.
இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த ப்ராண ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து
நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி, அதனை  மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன்,
நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்


மகாகவி பாரதியார் வசனக் கவிதை - காற்று


          காற்றே வா
காற்றே வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே.
 காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே
பார்த்தாயா? இதோ,தள்ளிவிட்டாய்,
 புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி
வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்
Mahakavi Bharathiyar Vasanak Kavithai -Kaatru