மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, June 07, 2020

மகாகவி பாரதியார் வசனக் கவிதை - காற்று -2


                    காற்றே வா
காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு,
மனத்தை  மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா.
இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த ப்ராண ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து
நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி, அதனை  மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன்,
நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்


No comments:

Post a Comment