மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, August 29, 2019

பாரதி வழியில் எழுந்தால் நாமே இமயம் - கவிஞர் பரிணாமன்

பாரதி வழியில்  எழுந்தால் நாமே இமயம்

கிருத யுகம் நிலைநிறுத்த
விரதம் கொண்ட வீரர்
கல்வியும் புதிய ஞானமும் பெற்று
திரண்டு நிற்கும் தோழரே
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!

பாட்டுக்கொரு பெரும்புலவன்
பாரதி வழியில் வந்தவரே - அன்னை
நாட்டுக்கு துரோகம் இழைப்பவரை
நரபலி காண நிற்பவரே
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!

நாற்றாங்காலில் விதைகள் பாவி
நடவு செய்யலாம்!
நாட்கள் கடந்து போனதென்றால்
விதைத்ததும் அறுக்கலாம்!
ஏற்ற தருணம் அறிந்து நாட்டை
இடது பக்கம் திருப்பலாம்
ஏகபோக தேசத் துரோக
இனத்தின் வேர் அறுக்கும்
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!

நாளை நம் காலம் எனும் கீதம் இசைப்பீர்
நியாயம் நீதி நல்லாட்சி
பாதை வகுப்பீர்...
கால கால அடிமை விலங்குகள்
ஆதிக்கக் கதவை உடைப்பீர்...
சாலச் சிறந்த தத்துவ கவிதைகள்
பாரதமெங்கும் விதைப்பீர்...
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!

  ..... கவிஞர் பரிணாமன்

Tuesday, August 27, 2019

பத்து தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான்! - பரிணாமன் கவிதைகள்

சுதந்திர மாடன்

பத்து தலை ராவணனை
ஒத்த தலை ராமன் வென்றான்!
மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா- அந்த
வித்தைகளைக் கத்துக்காம
சத்தியத்தை ஒத்துக்காம
கத்தினால் போனதெல்லாம் கிடைக்குமாடா ?

புலி பசித்து கிடந்தாலும்
புல்லைத் திங்க மாட்டாது
போட்டதைத் திங்கிறியே சுடலைமாடா! உன்
பெண்டு பிள்ளை வாழ்க்கையிலே
கண்ட சுகம் ஏதுமில்லை
தண்டத்துக்கு உழைக்கிறியே ஞாயமாடா ?
அடுத்த நாள் சோத்துக்கில்லே
அடகு வைக்க பண்டமில்லா
யாருமேல கோவிக்கிறா சுடலைமாடா - உனைக்
கெடுத்ததோ சாமியில்லே
பாடுபடும் பூமியிலே
கேடுகெட்ட சுரண்டல் முறை தெரியுமாடா ?
மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது என்பதாலே
யானை கட்டிப் போரடித்த திந்தநாடுடா - அந்தப்
பாடி வரும் காவேரி
பாயும் நிலமத்தனையும்
பாவிப் பண்ணையார்களிடம் தந்ததாருடா?

ஓட்டுக் கேட்டு கையெழுத்து
கோட்டையிலே படையெடுத்து
மூட்டை மூட்டையாக அடிச்சான் சுடலைமாடா - சொந்த
நாட்டைக்கூட விலைபேசி
ரகசியமாவித்திருவான்
லஞ்சத்துக்கு பொறந்ததிந்த ஆட்சியமைப்புடா!
நீ பொறந்த கரிசல் மண்ணில்
தான் பொறந்தேன் மாகவிஞன்!
பாரதியின் கனவு உனக்குத் தெரியுமாடா ? - அவன்
வேறு பல நாட்டுக்கெல்லாம்
வெளிச்சமாப் போன பின்னும்
நீ உணர முடியாமல் போனதென்னடா?

பரிணாமன் கவிதைகள்

பாரதி பிடித்த தேர்வடமும் - நடு வீதி கிடக்கிறது- பரிணாமன்

                         தேர் 

ஆயிரம் ஆயிரம் சிப்பிகள் செய்த
அழகு தெரிந்து - நம்
காவியம் சிறந்த ஓவியம் கடைந்த
வேலை பாடியது!
பாரதி பிடித்த தேர்வடமும் - நடு
வீதி கிடக்கிறது - அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால் தேர் நடக்கும்; அன்றேல்
வெயில் மழையில் கிடைக்கும்!

அழகு தெரிந்து - பாரத
அன்னை தெரியாது!

நரம்பு மண்டலம் தளர்ந்து விட்டால்
நல்ல கனவுகள் பிறக்கும்? - அட
நல்ல கனவுகள் கண்டால் மட்டும்
விரும்பும் வாழ்க்கை குதிக்குமோ?

வானும் சுரந்திட மண்ணும் சுரந்திட
மனித வறண்டு போமோ? -
விஞ்ஞானம் வளர்ந்தும் விண்ணோடு கலந்தும்
சகுனிச் சூதுதானோ?

சீதையும் எண்ணரும்
கோபியரும் கண்ட
சித்திரப் பூரதமே - இனியுன்
புத்திரர் கைவசம்...
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்!

...... பரிணாமன்

Saturday, August 24, 2019

..பிரமிள் கவிதை


பிரமிளின் கவிதை




                                        நான்காவது மாடியில் எங்கள்  குடியிருப்பு.காலை நேரம். பால்கனியில் நிற்கிறேன். சில்லென்று   காற்று இதமாக  வீசுகிறது.தூரத்து மலைகளும், அருகினில் தலைவிரித்து மென்மையாக  ஆடும் பச்சை மரங்களும் தங்களின் வனப்பை கண்ணுக்கு விருந்தாக அள்ளித் தருகின்றன.

                                      எதிர் திசையில் ஒரு கோவில். அப்போது அங்கிருந்து விர்ரென்று  பறந்து வந்த ஒரு   புறாவின் சிறக்கிலிருந்து பிரிந்த இறகு அங்கும் இங்குமாய் வானில் அலைந்து கொண்டிருந்தது.

                                    எப்போதோ நான் படித்த இந்த  பிரமிளின் கவிதை அப்போது  என் நினைவுக்கு வந்து சென்றது.

காவியம் 

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

..பிரமிள்

  

Logo of NFPE ( National FederationNFPE of Postal Employees)

Some of Logos of NFPE are as under.


NFPE Logo 1

NFPE Logo 2

NFPE Logo 3

NFPE Logo 4

NFPE Logo 5

NFPE Logo 6

NFPE Logo 7