மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, August 27, 2019

பாரதி பிடித்த தேர்வடமும் - நடு வீதி கிடக்கிறது- பரிணாமன்

                         தேர் 

ஆயிரம் ஆயிரம் சிப்பிகள் செய்த
அழகு தெரிந்து - நம்
காவியம் சிறந்த ஓவியம் கடைந்த
வேலை பாடியது!
பாரதி பிடித்த தேர்வடமும் - நடு
வீதி கிடக்கிறது - அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால் தேர் நடக்கும்; அன்றேல்
வெயில் மழையில் கிடைக்கும்!

அழகு தெரிந்து - பாரத
அன்னை தெரியாது!

நரம்பு மண்டலம் தளர்ந்து விட்டால்
நல்ல கனவுகள் பிறக்கும்? - அட
நல்ல கனவுகள் கண்டால் மட்டும்
விரும்பும் வாழ்க்கை குதிக்குமோ?

வானும் சுரந்திட மண்ணும் சுரந்திட
மனித வறண்டு போமோ? -
விஞ்ஞானம் வளர்ந்தும் விண்ணோடு கலந்தும்
சகுனிச் சூதுதானோ?

சீதையும் எண்ணரும்
கோபியரும் கண்ட
சித்திரப் பூரதமே - இனியுன்
புத்திரர் கைவசம்...
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்!

...... பரிணாமன்

No comments:

Post a Comment