பாரதி வழியில் எழுந்தால் நாமே இமயம்
கிருத யுகம் நிலைநிறுத்த
விரதம் கொண்ட வீரர்
கல்வியும் புதிய ஞானமும் பெற்று
திரண்டு நிற்கும் தோழரே
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!
பாட்டுக்கொரு பெரும்புலவன்
பாரதி வழியில் வந்தவரே - அன்னை
நாட்டுக்கு துரோகம் இழைப்பவரை
நரபலி காண நிற்பவரே
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!
நாற்றாங்காலில் விதைகள் பாவி
நடவு செய்யலாம்!
நாட்கள் கடந்து போனதென்றால்
விதைத்ததும் அறுக்கலாம்!
ஏற்ற தருணம் அறிந்து நாட்டை
இடது பக்கம் திருப்பலாம்
ஏகபோக தேசத் துரோக
இனத்தின் வேர் அறுக்கும்
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!
நாளை நம் காலம் எனும் கீதம் இசைப்பீர்
நியாயம் நீதி நல்லாட்சி
பாதை வகுப்பீர்...
கால கால அடிமை விலங்குகள்
ஆதிக்கக் கதவை உடைப்பீர்...
சாலச் சிறந்த தத்துவ கவிதைகள்
பாரதமெங்கும் விதைப்பீர்...
எழுந்தால் நாமே இமயம் அறிவீர்!
..... கவிஞர் பரிணாமன்
No comments:
Post a Comment