பிரமிளின் கவிதை
நான்காவது மாடியில் எங்கள் குடியிருப்பு.காலை நேரம். பால்கனியில் நிற்கிறேன். சில்லென்று காற்று இதமாக வீசுகிறது.தூரத்து மலைகளும், அருகினில் தலைவிரித்து மென்மையாக ஆடும் பச்சை மரங்களும் தங்களின் வனப்பை கண்ணுக்கு விருந்தாக அள்ளித் தருகின்றன.
எதிர் திசையில் ஒரு கோவில். அப்போது அங்கிருந்து விர்ரென்று பறந்து வந்த ஒரு புறாவின் சிறக்கிலிருந்து பிரிந்த இறகு அங்கும் இங்குமாய் வானில் அலைந்து கொண்டிருந்தது.
எப்போதோ நான் படித்த இந்த பிரமிளின் கவிதை அப்போது என் நினைவுக்கு வந்து சென்றது.
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
..பிரமிள்
No comments:
Post a Comment