மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, March 19, 2017

- மகாகவி பாரதியார் - வசனக் கவிதை - ஞாயிறு

வசனக் கவிதை
- ஞாயிறு

மகாகவியின் வசனக் கவிதைகள் மிகவும் ரசனையானவை. ஞாயிறு என்ற தலைப்பில் உள்ள இந்தக் கவிதை , சூரியனை நோக்கி வினா தொடுக்கும் . எல்லா வினாக்களுக்கும் ஒரே பதில் ஆம் என்பது தான் . ஆனால் கேட்கப்படும் கேள்விகள் சுவையானவை ,
இருளுக்கும் உனக்கும் உள்ள உறவென்ன ? என்பதை சொல் என ஞாயிறிடம் கேட்கும் அன்பான விசாரிப்பு இது.
கவிதை ரசனையை யாரும் சொல்லுவதால் உணர முடியாது. திரும்ப திரும்ப படித்தால் நீங்களே உணர்வீர்கள்

ஞாயிறே இருளை
என்ன செய்துவிட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா?
விழுங்கி விட்டாயா?
கட்டி முத்தமிட்டு
நின் கதிர்களாகிய கைகளால்
மறைத்து விட்டாயா?  
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக்
காணாத மயக்கத்தால்
இருண்டிருந்ததா?
நின்னைக் கண்டவுடன்
நின்னொளி தானுங்கொண்டு
நின்னைக் கலந்துவிட்டதா?
நீங்கள் இருவரும்
ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக
வந்து உலகத்தைக் காக்கும்படி
உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?
உங்களுக்கு மரண மில்லையா?
 நீங்கள் அமுதமா?
உங்களைப் புகழ்கின்றேன்,ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்

- மகாகவி  பாரதியார் 

மகாகவி பாரதியாரின் வசனக் கவிதை - இன்பம்

வசனக் கவிதை
- இன்பம்


மகாகவி பாரதியின் வசனக் கவிதை இன்பம் 

இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான்
இனிமை யுடைத்து;

காற்றும் இனிது.

தீ இனிது.
நீர் இனிது.
நிலம் இனிது.

ஞாயிறு நன்று;

திங்களும் நன்று.
வானத்துச் சுடர்கள்
எல்லாம் மிக இனியன.
மழை இனிது.
மின்னல் இனிது.
இடி இனிது.

கடல் இனிது,

மலை இனிது
காடு நன்று.  
ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும்,
செடியும், கொடியும்,
மலரும்,காயும்,
கனியும் இனியன.

பறவைகள் இனிய.

ஊர்வனவும் நல்லன.
விலங்குகள் எல்லாம்
இனியவை; நீர்
வாழ்வனவும் நல்லன.

மனிதர் மிகவும் இனியர்.

ஆண் நன்று.
பெண் இனிது.
குழந்தை இன்பம்.
இளமை இனிது.
முதுமை நன்று.

உயிர் நன்று.

சாதல் இனிது.
- மகாகவி

பாரதியார்  

Saturday, March 18, 2017

அன்பு குறித்து மாககவி பாரதி -3

அன்பு குறித்து மாககவி பாரதி 

ன்பு  மிகுந்த தெய்வமுண்டு -துன்பம்

அத்தனையும்  போக்கிவிடும்  பாப்பா!

மகாகவி பாரதியார் அன்பு குறித்து -2

மகாகவி பாரதி அன்பு குறித்து

"துன்ப நினைவுகளும் 
சோர்வும் பயமும் எல்லாம் 
அன்பில் அழியுமடி கிளியே 
அன்பிற்கு அழிவில்லை"


மகாகவி பாரதியார் அன்பு குறித்து - 1

மகாகவி பாரதி    அன்பு குறித்து


"வேட்டை அடிப்பது வில்லாலே 
அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "


மகாகவி பாரதியார் அன்பு குறித்து


மகாகவி பாரதி அன்பு குறித்து

மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான் .மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது. அன்பு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ ஒழிந்து போயிருக்கும் மனித இனம் .பாரதி இதை நன்கு உணர்ந்தவன்.அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தான் .
சக மனிதர்களிடமட்டுமின்றிகாக்கைகுருவி களிடமும்அன்புகாட்டியவன்.

"
அன்பிற் சிறந்த தவமில்லை

அன்புடையார்  இன்புற்று வாழ்தல் இயல்பு "

"அன்பு தன்னில் செழிக்கும் வையம்"

"அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம்” .

"வேட்டை அடிப்பது வில்லாலே அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "

"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை"

"உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் "

பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்  விளங்குக!

“பகை நடுவினில்  அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

“அன்பு  மிகுந்த தெய்வமுண்டு -துன்பம்
அத்தனையும்  போக்கிவிடும்  பாப்பா!

“அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்”

“அன்பு கனிந்த கனிவே சக்தி,

“சங்கரன் அன்புத் தழலே சக்தி”

பாட்டினில் அன்பு செய்.

“அன்பு  வாழ்க என்று அமைதியில்  ஆடுவோம்.

“அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  நல்லது தீயது நாமறியோம்”

என அன்பு பற்றி பறைசற்றியவன் பாரதி .

Monday, March 13, 2017

False promises , sweet lies, money and muscle power work well in elections


On ignominious treatment of Irom Chanu Sharmila  in the hustings 

It pained me to see that  Ms Irom Sharmila who was on 17-year fast demanding repeal of AFSPA contested election in Manipur and got only 90 votes.Voters are not recognizing those who sacrifice their life for the cause of people. She lost her youth in her 17 year fast.Voters get enchanted towards those who give false promises and sweet lies. Money and muscle power work well in election. Pelf and fiefdom rule the roost.She inspired me a lot. But she lost in the mired abyss of politics.




Irom Chanu Sharmila - An inglorious defeat for Indian Voters .

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் -7

கண்ணிலாக் குழந்தைகள் போல் -பிறர் 

      காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்

.....மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் -6

கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் 

      காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார். 


.....மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்- 5

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச் 

      சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;

.....மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் - 4

கொஞ்சமோ பிரிவினைகள்? -ஒரு 

      கோடி என்றால் அது பெரிதாமோ? 

.....மகாகவி பாரதியார்


நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் - 3



எப்போதும் கைகட்டுவார் -இவர் 

      யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்.... 
.....மகாகவி பாரதியார்


நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் -2



மந்திரவாதி என்பார் -சொன்ன 

      மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்

-----  மகாகவி பாரதியார் 




நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் - 1


அஞ்சி அஞ்சிச் சாவார் -இவர் 

      அஞ்சாத பொருளில்லை அவனியிலே
-----  மகாகவி பாரதியார் 



நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட வாக்காளர்களை நினைத்தால்

 நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட வாக்காளர்களை நினைத்தால் 

ஐரோம் சானு ஷர்மிளா  மணிப்பூர் மக்களின் மனித உரிமைகளுக்காக 17  ஆண்டு காலம் உண்ணாவிரதம் இருந்தார் . மணிப்பூர் மக்களை கொடுமைக்கு உள்ளாக்கும் சட்டம் அகற்றப் படவேண்டும் என்பதற்காக  17 ஆண்டு உண்ணாவிரத மிருந்து  தன இளமைக்காலம் முழுவதையும் தொலைத்தார் . 

அவர் தேர்தலில் நின்றபோது எந்த மக்களுக்காக போராடினாரோ  அவர்கள் போட்ட ஒட்டு மொத்தம்  90  தான் .தியாகத்திற்கு மதிப்பிலாமல் போய்விட்டது . பலம் , பணம்  காசு அடியாள்   ஜாதி மதம்  போன்றவை தான்   தேர்தலில் ஜெயிக்கும் தகுதி  என்றால் யாரை நோவது எனப்  புரியவில்லை .

 மகாகவிபாரதி தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கண்டு மனம் வெம்பி பாடிய பாடல் "நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட மனிதர்களை நினைத்தால்" . அப்பாடலை  படித்த  உடன் எனக்கு தெளிவு பிறந்து விட்டது    அப்பாடல்கள் வரிகளை படங்களாய் தந்துள்ளேன்

Saturday, March 11, 2017

மகாகவி பாரதியின் காளிப் பாட்டு


யாதுமாகி நின்றாய்  காளி எங்கும் நீ நிறைந்தாய் 
--- மகாகவி பாரதி 


மகாகவி பாரதி -- வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ



வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
--- மகாகவி பாரதியார்