மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, February 24, 2019

வாழும் வழி எது தெரியுமா .?- மகாகவி பாரதியின் பதில்

வாழும் வழி எது தெரியுமா .?- மகாகவி பாரதியின் பதில் 
மகாகவி பாரதி தனது பாப்பா பாட்டில் " உண்மை தான் தெய்வம்"  என்பதை உணரவேண்டும் என்கிறான் . 

ஓதிடும் தெய்வங்கள் எல்லாம் பொய் . உண்மையே  தெய்வம்   என்று கீழ்கண்ட கவிதை வரிகளில் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும் 

"உண்ம்மையின் பேர் தெய்வம் என்போம் - மற்று 
ஓதிடும்  தெய்வங்கள் பொய்  எனக் கண்டோம் "

தான் கண்டு உணர்ந்தவற்றையே குழந்தைப் பாப்பாவிற்கும் மகாகவி  சொல்வதை இங்கு காணலாம் .

மனித குல வாழ்வில் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் வந்து செல்லக் கூடியவை ; தவிர்க்கமுடியாதவை .எனவே அவற்றை எதிகொள்ளும் துணிச்சலை வைரமுடையே  நெஞ்சே தரும் . எனவே குழந்தை பருவத்திலேயே வாழ்வின் எதார்த்தத்தை  அவர்களுக்கு புரிய வைக்கிறான் . 

வாழும் வழி எது தெரியுமா .உண்மையை தெய்வம் என்று உணர்வதும், எல்லாவற்றையும் எதிர்கொள்ள நெஞ்சை வலிமையாக வைத்திருப்பதும் தான் என்கிறான் பாரதி. 

Bharathiyar quote






Wednesday, February 20, 2019

புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி- மகாகவி பாரதியார்


புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-1

ஆகாவென்று  ழுந்தது பார்  யுகப்புரட்சி! 
மாகாளி பராசக்தி உருசியாநாட் 
     
டினிற் கடைக்கண் வைத்தாள்,அங்கே 
ஆகாவென்று  ழுந்தது பார் யுகப்புரட்சி! 
     
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்! 
வாகான தோள்புடைத்தார் வானமரர்; 
     
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர் 
போகாமற் கண்புகைந்த மடிந்தனவாம்; 
     
வையகத்தீர், புதுமை காணீர்!1
-- மகாகவி பாரதியார்

Bharathiyar on New Russia - poetic quote 

புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-2

தருமம்  தன்னைத்  திரணம் எனக்
கருதிவிட்டான்  ஜார் மூடன்; 
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் 
     
ஜாரெ னும்பே ரிசைந்த பாவி 
சரணின்றித் தவித்திட்டார்  நல்லோரும் 
     
சான்றோரும்; தருமம் தன்னைத் 
திரணம் எனக் கருதிவிட்டான் ஜார்மூடன்; 
     
பொய் சூது  தீமையெல்லாம் 
அரணியத்திற்  பாம்புகள்போல் மலிந்துவளர்ந் 
     
தோங்கினவே  அந்த நாட்டில்!
-- மகாகவி பாரதியார்
*திரணம் - துச்சம், துரும்பு

Bharathiyar on New Russia - poetic quote 


புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-3

உண்மை சொல்வோர்க் கெல்லாம் 
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை; 
     
பிணிகள்  பல வுண்டு; பொய்யைத் 
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க 
     
ளுண்டு;உண்மை சொல்வோர்க் கெல்லாம் 
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; 
     
தூக்குண்டே இறப்ப துண்டு; 
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே 
     
ஆவிகெட முடிவ துண்டு.3
-- மகாகவி பாரதியார்


Bharathiyar on New Russia - poetic quote 
புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-4

இம் என்றால் சிறைவாசம்;
ஏன் என்றால்     வனவாசம்
இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால்
     
வனவாசம்,இவ்வா றங்கே 
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே 
     
அறமாகித் தீர்ந்த போதில், 
அம்மை மனங்கனிந்திட்டாள்; அடிபரவி 
     
உண்மை சொலும் அடியார்  தம்மை 
மும்மையிலும் காத்திடு நல்விழியாலே 
     
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
-- மகாகவி பாரதியார்


Bharathiyar on New Russia - poetic quote 

புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-5

அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சட சடவென்று சரிந்திட்டார்
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் 
     
ஜாரரசன்;இவனைச் சூழ்ந்து 
சமயமுள படிக்கெல்லாம் பொய்வறி 
     
அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சட சடவென்று சரிந்திட்டார், 
     
புயற்காற்றுச் சூறை தன்னில் 
திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் 
     
விறகான செய்தி போலே!
-- மகாகவி பாரதியார்
  *சுமடர் - அறிவில்லாதவன், கீழ்மகன்

Bharathiyar on New Russia - poetic quote 
புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-6

இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான் 
     
கிருதயுகம் எழுக மாதோ
குடிமக்கள்  சொன்னபடி  குடிவாழ்வு 
     
மேன்மையுறக்  குடிமை  நீதி 
கடியொன்றில் எழுந்ததுபார்  குடியரசென்று 
     
உலகறியக்  கூறி விட்டார்; 
அடிமைக்குத்  தளையில்லை  யாரும் இப்போது 
     
அடிமையில்லை அறிக  என்றார்; 
இடிபட்ட சுவர் போலே கலிவிழுந்தான் 
     
கிருதயுகம் எழுக மாதோ!
-- மகாகவி பாரதியார்

Bharathiyar on New Russia - poetic quote 


போகின்ற பாரதத்தை போ போ போ என சபித்தல் -- மகாகவி பாரதியார்


போ போ போ என போகின்ற பாரதத்தைச் சபித்தல்

வலிமையற்ற தோளினாய் போ போ போ 
     
மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ 
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ 
     
பொறி யிழந்த விழியினாய் போ போ போ 
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ 
     
ஒளியி ழந்த மேனினாய் போ போ போ 
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ 
     
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

-----  மகாகவி பாரதியார்


Bharathiyar poetic quote 

இன்று பார தத்திடை நாய்போலே 
     
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ 
நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ 
     
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ 
சென்று போன பொய்யெலாம் மெய்யா கச் 
     
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ 
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக 
     
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

-----  மகாகவி பாரதியார்


Bharathiyar poetic quote 

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ 
      வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ 
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும் 
     
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ 
மாறு பட்ட வாதமே ஐந்நூறு 
     
வாயில் நீள ஓதுவாய் போ போ போ 
சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர் 
     
சிறியவீடு கட்டுவாய் போ போ போ
-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote 

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ 
     
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ 
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று 
     
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ 
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே 
     
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ 
சோதி மிக்க மணியிலே காலத் தால் 
     
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
-----  மகாகவி பாரதியார்



Bharathiyar poetic quote