மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, February 20, 2019

வருகின்ற பாரதத்தை வா வா வா என வாழ்த்தும் மகாகவி பாரதியார்

  வருகின்ற பாரதத்தை வா வா வா என வாழ்த்துதல்


ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 
     
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிப டைத்த மொழியினாய் வா வா வா 
     
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா 
     
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா 
     
ஏறு போல்ந டையினாய் வா வா வா

-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote 

மெய்மை கொண்ட நூலையே அன்போடு 
      வேத மென்று போற்றுவாய் வா வா வா 
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா 
     
பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா 
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா 
     
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா 
தெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த் 
     
தேச மீது தோன்றுவாய் வா வா வா

-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote


இளைய பார தத்தினாய் வா வா வா 
      எதிரி லாவ லத்தினாய் வா வா வா 
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும் 
     
உதய ஞாயி றொப்பவே வா வா வா 
களையி ழந்த நாட்டிலே முன்போலே 
     
களைசி றக்க வந்தனை வா வா வா 
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் 
     
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா

-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 
      விநயம் நின்ற நாவினாய் வா வா வா 
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா 
     
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா 
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா 
     
கருதிய தியற் றுவாய் வா வா வா 
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம் 
     
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
-----  மகாகவி பாரதியார்


Bharathiyar Poetic quote


No comments:

Post a Comment