மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, February 08, 2019

நீதிநெறி யினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர்--மகாகவி பாரதி




பாரதியார் பொன்மொழி - Bharathiyar quote
"நல்வழி" என்னும் நீதி நூலில்  வரும் ஔவையாரின் பாடல் இது

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி"


பட்டாங்கு : உண்மையான சாத்திரம்
பாடலின்  அர்த்தம்: 
  • இப்பூவுலகில்  பிறந்த மனிதர்களில் இரண்டு வகை சா தியினர்  மட்டுமே உள்ளனர். 
  • ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர். 
  • மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை பிறருக்கு  கொடுத்து உதவாத கீழோர்.
  •  நீதி நெறி நூலில் சொல்லப்பட்டது  தான் இது , 

 சாதி குறித்து பாரதி  சொல்லும்  கீழ்க் கண்ட கவிதை வரிகளைப் படித்தால் சாதிய  பகுப்பு முறை மீது அவன்  கொண்ட கோபம் நமக்கு புரியும் 

சாதிகள் இல்லையடி பாப்பா!" 
"குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" 

"சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்"

"தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்".


எனவே தான் சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்ற தமிழ் மகள் அவ்வையின் சொல் அமிழ்தாக இனிக்கிறது மகாகவிக்கு. 

 அவ்வை பிராட்டியின் கருத்தையே  தன் அழகான  கவிதை வரிகளில் 

"நீதிநெறி யினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்"  வலியுறுத்துகிறான்  பாரதி 

No comments:

Post a Comment