சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்
12.12.2012 -- சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்.அதற்கு முந்திய தினமே மதுரை நகர் சுவர்களில் வண்ணமய போஸ்டர்களும் ,அவற்றின் மீது கற்பனைக்கு எட்டாத வாசகங்களும் கண்டேன் . ஆனால் இவ்வளவு வெறியை ரசிகர்கள் மூளை மீது திணித்ததன் பெரும்பங்கு மீடியாக்களையே சாரும் .நானும் ரஜினி ரசிகன் தான்..எண்பது தொன்னூறுகளில் ரஜினி படம் ஒன்றுகூட மிஸ் பண்ணியதில்லை. மானாமதுரையில் இருந்தபோதுமனைவியை கேரியரிலும் குழந்தைகளை ஹேண்டு பாரிலும் வைத்துக்கொண்டு ரஜினி படம் பார்க்க சைக்கிளில் சிட்டாகப் பறந்த என் கதை சுவாரஸ்யமானவை . நினைவுகளில் நிரம்பிப் கிடப்பவை ஏன் .தில்லுமுல்லு படத்தை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன் .
ஆனால் இப்ப ரசிகர்கள் பண்ணுவதெல்லாம் ஏனோ எனக்கு ரெம்ப ஓவராய் தெரியுது .
என்ன காரணம் தெரியல.நீங்களாவது சொல்லுங்க .
No comments:
Post a Comment