தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது1/2
செவ்விது ,செவ்விது, பெண்மை!
செவ்வொளி வானில் மறைந்தே- இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை இதழ்நகை வீச, -விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள் .
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!
......மகாகவி பாரதியார்
குறிப்பு
கோணம் : அங்குசம்
தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது1/2
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
காதலினால் உயிர் தோன்றும்;-இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் ;
காதலினால் அறிவு எய்தும் -இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலினால் அவள் கையைப் -பற்றி
அற்புதம் என்று இரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோர் பாட்டிசைத் திட்டாள்.
......மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment