மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, February 20, 2019

வருகின்ற பாரதத்தை வா வா வா என வாழ்த்தும் மகாகவி பாரதியார்

  வருகின்ற பாரதத்தை வா வா வா என வாழ்த்துதல்


ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 
     
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிப டைத்த மொழியினாய் வா வா வா 
     
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா 
     
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா 
     
ஏறு போல்ந டையினாய் வா வா வா

-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote 

மெய்மை கொண்ட நூலையே அன்போடு 
      வேத மென்று போற்றுவாய் வா வா வா 
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா 
     
பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா 
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா 
     
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா 
தெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த் 
     
தேச மீது தோன்றுவாய் வா வா வா

-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote


இளைய பார தத்தினாய் வா வா வா 
      எதிரி லாவ லத்தினாய் வா வா வா 
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும் 
     
உதய ஞாயி றொப்பவே வா வா வா 
களையி ழந்த நாட்டிலே முன்போலே 
     
களைசி றக்க வந்தனை வா வா வா 
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் 
     
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா

-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 
      விநயம் நின்ற நாவினாய் வா வா வா 
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா 
     
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா 
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா 
     
கருதிய தியற் றுவாய் வா வா வா 
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம் 
     
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
-----  மகாகவி பாரதியார்


Bharathiyar Poetic quote


Friday, February 15, 2019

''மகாகவி பாரதியார் பாடல்கள் முழு தொகுப்பு'' - பிடிஎப் டாகுமெண்ட்டாக இலவச பதிவிறக்கம் செய்ய - To download of ''Bharathiyar songs- A complete Collection'' in pdf document format( .pdf file)

To download Bharathiyar songs 

''மகாகவி பாரதியார் பாடல்கள் முழு தொகுப்பு''  - பிடிஎப்  டாகுமெண்ட்டாக (.pdf file) இலவச பதிவிறக்கம் செய்ய  கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 



Please click the following link for free download of ''Bharathiyar songs- A complete Collection'' in pdf document format( .pdf file) 



''மகாகவி பாரதியார் பாடல்கள் முழு தொகுப்பு''வேர்ட் டாகுமெண்ட்டாக - இலவச பதிவிறக்கம் செய்ய - To download ''Mahakavi Bharathiyar songs-Complete Collection'' in word document





''
மகாகவி பாரதியார் பாடல்கள் முழு தொகுப்பு''  - வேர்ட்  டாகுமெண்ட்டாக (.docx file) இலவச பதிவிறக்கம் செய்ய  கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 

 Please click the following link for free download of ''Bharathiyar songs- A complete Collection'' in word document format( .docx file) 



மகாகவி பாரதியார் '' நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா! காடு கமழும் கற்பூரச் சொற்கோ!'' -- புரட்சி கவிஞர் பாரதிதாசன்


மகாகவி பாரதியார் பற்றி பாரதிதாசன் 

பைந் தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம்பட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!
 ---- புரட்சி கவிஞர் பாரதிதாசன் 



ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்--மகாகவி பாரதியார்

Bharathiyar quote /poem - மகாகவி பாரதியார் பொன் மொழி / கவிதை 


ஊதுமினோ வெற்றி! 
ஒலிமினோ வாழ்த்தொலிகள் 
ஓதுமினோ வேதங்கள்!
ஓங்குமினோ!ஓங்குமினோ! 
தீதுசிறிதும் பயிலாச் 
செம்மணி மாநெறிகண்டோம்; 
------மகாகவி பாரதியார் 

Wednesday, February 13, 2019

ஒற்றுமை வழி ஒன்றே வழி- --- மகாகவி பாரதியார்

Bharathiyar Quote- பாரதியார் கவிதை பொன்மொழி 

ஒற்றுமை வழி ஒன்றே  வழி என்பது        ஓர்ந்திட்டோம்;-நன்கு- தேர்ந்திட்டோம்; 
மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக்கெலாம்        மலைவு றோம்;-சித்தம்-கலைவுறோம்

--- மகாகவி பாரதியார் 

Tuesday, February 12, 2019

உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்--மகாகவி பாரதியார்

உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றிஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிதுஉள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

--- மகாகவி பாரதியார் 


Bharathiyar quote on Truth 


English rendition of Mahakavi Bharathiyar's above poem on Truth.

Humanity is one.
Those who find truth will get the bliss.
The fallen today will rise up tomorrow
The risen up will end in destruction.
Truth's other name is God.
Other Gods we worship are untruth.
Let us profess "Truth is Veda".
Others are mere stories.
Bharathiyar quote on Truth rendered in English
 
Bharathiyar quote on Truth both in Tamil and English 


பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. - Mahakaviமகாகவி பாரதியார்



Mahakavi Bharathiyar quote 


வில்லினை யெடடா!-கையில்
வில்லினை யெடடா!-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி 
செய்திடடா!                                                (வில்)

வாடி நில்லாதே;-மனம்
வாடி நில்லாதே;-வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் 
சொல்லாதே.                                                (வில்)

ஒன்றுள துண்மை-என்றும்
ஒன்றுள துண்மை-அதைக்
கொன்றி டொணாது குறைத்த 
லொண்ணாது.                                              (வில்)

துன்பமு மில்லை-கொடுந்
துன்பமு மில்லை-அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் 
பில்லை.                                                         (வில்)
-------மகாகவி பாரதியார் 


பள்ளிகள் இல்லாத ஊரை தீட்டு கொளுத்த வேண்டும் - மகாகவி பாரதி





Bharathiyar quote from his poem on "Education to all"
வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதி தோறும் இரண்டொரு பள்ளி;

நாடு முற்றிலும் உள்ள வூர்கள்

நகர்க ளெங்கும் பலபல பள்ளி
;
தேடு கல்வியி லாததொ ரூரைத்

தீயி னுக்கிரை யாக மடுத்தல்

--- மகாகவி பாரதியார் 

Friday, February 08, 2019

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் - மகாகவி பாரதியார்

Bharathiyar quote- மகாகவி பாரதியார் பொன்மொழி

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு 
வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்று பல கல்வி தந்து - இந்த
பாரை  உயர்த்திட வேண்டும்   
- மகாகவி பாரதியார் 

நீதிநெறி யினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர்--மகாகவி பாரதி




பாரதியார் பொன்மொழி - Bharathiyar quote
"நல்வழி" என்னும் நீதி நூலில்  வரும் ஔவையாரின் பாடல் இது

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி"


பட்டாங்கு : உண்மையான சாத்திரம்
பாடலின்  அர்த்தம்: 
  • இப்பூவுலகில்  பிறந்த மனிதர்களில் இரண்டு வகை சா தியினர்  மட்டுமே உள்ளனர். 
  • ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர். 
  • மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை பிறருக்கு  கொடுத்து உதவாத கீழோர்.
  •  நீதி நெறி நூலில் சொல்லப்பட்டது  தான் இது , 

 சாதி குறித்து பாரதி  சொல்லும்  கீழ்க் கண்ட கவிதை வரிகளைப் படித்தால் சாதிய  பகுப்பு முறை மீது அவன்  கொண்ட கோபம் நமக்கு புரியும் 

சாதிகள் இல்லையடி பாப்பா!" 
"குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" 

"சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்"

"தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்".


எனவே தான் சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்ற தமிழ் மகள் அவ்வையின் சொல் அமிழ்தாக இனிக்கிறது மகாகவிக்கு. 

 அவ்வை பிராட்டியின் கருத்தையே  தன் அழகான  கவிதை வரிகளில் 

"நீதிநெறி யினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்"  வலியுறுத்துகிறான்  பாரதி 

"தமிழ், தமிழர் என்பதற்கு பின்னரே இந்தியா இந்தியர்" என்பதெல்லாம் - மகாகவி பாரதி

Mahakavi Bharathiyar quote


 "தமிழ், தமிழர் என்பதற்கு பின்னரே இந்தியா இந்தியர்" என்ற சிந்தனையை அப்போதே நம்மிடம் விதைத்தவன் மகாகவி பாரதி . அதற்கு உதாரணமாக பாரதியின் இந்தப் பாடலைக் குறிப்பிடலாம்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! 

.. தமிழ்  வாழவேண்டும்.  தமிழ் பெருமக்கள்  நீடு வாழவேண்டும் என்று சொன்ன பாரதி  அந்த வரிகளுக்கு  பின்னரே பாரத நாடு  வாழவேண்டும் என்று சொல்கிறான் .

இந்தியா என்பதெல்லாம் தமிழுக்கு, தமிழர்க்கு பிறகு தான் என்பதை தமிழர்கள் உணரவேண்டும்.


Wednesday, February 06, 2019

Tongue twister song from the movie” Singing in the rain”



Tongue twister song from the movie” Singing in the rain”.The dance performance by Gene Kelly and Donald O'Connor is superb. And it is ever rememberable and enjoyable to watch .Its lyrics are also included as under

Moses supposes his toeses are Roses,
But Moses supposes Erroneously,
Moses he knowses his toeses aren't roses,
As Moses supposes his toeses to be!
Moses supposes his toeses are Roses,
But Moses supposes Erroneously,
A mose is a mose!
A rose is a rose!
A toes a toes!
Hooptie doodie doodle
Moses supposes his toeses are Roses,
But Moses supposes Erroneously,
For Moses he knowses his toeses arent roses,
As Moses supposes his toeses to be!
Moses
(Moses supposes his toeses are roses)
Moses
(Moses supposes erroneously)
Moses
(Moses supposes his toeses are roses)
As Moses supposes his toeses to be!
A Rose is a rose is a rose is a rose is
A rose is for Moses as potent as toeses
Couldn't be a lily or a daphi daphi dilli
It's gotta be a rose cuz it rhymes with mose!
Moses!
Moses!
Moses!

A beautiful song from the movie” Singing in the rain”



A beautiful song from the movie” Singing in the rain”. The dance performance of Gene Kelly is so good. Whenever  it rains , this  song comes to my mind and makes me  to come out from home to dance and sing in the rain

I'm singin' in the rain
Just singin' in the rain
What a glorious feelin'
I'm happy again.
I'm laughing at clouds.
So dark up above
The sun's in my heart
And I'm ready for love.

Let the stormy clouds chase.
Everyone from the place
Come on with the rain
I've a smile on my face
I walk down the lane
With a happy refrain
Just singin'
Singin' in the rain

Dancin' in the rain...

I'm happy again...

I'm singin' and dancin' in the rain...