மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, November 19, 2013

பெண்கள் விடுதலைக் கும்மி




 பெண்கள் விடுதலைக் கும்மி

காப்பு

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.(கும்மி)
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி!(கும்மி)
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.(கும்மி)
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.(கும்மி)
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!(கும்மி)
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்.(கும்மி)
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!(கும்மி)

Sunday, September 29, 2013

Mahakavi Bharathiyar on Russian revolution

Sunday, September 01, 2013

Bharathi on Truth











Mahakavi Bharathi's poem on Truth.

Humanity is one.
Those who find truth will get the bliss.

The fallen today will rise up tomorrow
The risen up will end in destruction.

 Truth's other name is God.
Other Gods we worship are untruth.

Let us profess "Truth is Veda".

Others are mere stories.


Friday, April 05, 2013

பாரதி ஆத்திசூடி" ஞ" வரிசை

ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞமிறென இன்புறு
ஞேயம் காத்தல் செய்
ஞமலி-நாய்
ஞாயிறு-சூரியன்
ஞமிறு-வண்டு
ஞேயம்-நேசம்,

--------------------------

Thursday, April 04, 2013

பாரதியின் புதிய ஆத்திசூடி க வரிசை

கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல் கை கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்



--------------------------

Sunday, March 31, 2013

மகாகவி பாரதியரர் கவிதைகள்

மகாகவி பாரதியரர் கவிதைகள்  முழுவதையும் Word Document ல் யுனிகோடில் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்க்கை சொடுக்கவும்
https://docs.google.com/document/d/1en73UlRSPz2fbw3p2dZ7IG7bUESvxqv1eby0_SXwTdo/edit?usp=sharing

Sunday, March 17, 2013

படித்து ரசித்த கவிதை

சாலைகள் இப்போது
 குண்டும் குழியுமாய் ....
ஒப்பனை கலைக்கப்பட்ட
 நடிகைகள் மாதிரி
 காண்ட்ராக்டர்களின
கதை சொல்கின்றன..
மு. மேத்தா

--------------------------

மு. மேத்தா கவிதை

ஓட்டப் பந்தயத்தில் என்னை
ஓடச் சொல்லிவிட்டு நீங்கள்
 ஏன் என்னுடைய தோள்களைப்
 பிடித்து தொங்குகிறீர்கள்...?
பொய்யே தேசத்தின்
பொது மொழியாய் மாறியது!
இவ்வுலகில் காணும்
 துயர்க்கெல்லாம் காரணத்தை
 நான் அறிவேன்.
பொருளாதாரத்தில் பொதுவுடமை
 வாராமல் சூரியனின் வெளிச்சமும்
 சரியாக விநியோகமாகாது.
மு. மேத்தா

--------------------------

Wednesday, March 13, 2013

Saturday, March 09, 2013

Mahakavi Bharathiyar songs

உழவுக்கும்  தொழிலுக்கும் வந்தனை செய்யச் சொன்ன  மகாகவி பாரதி 
ஆண்  பெண் சமத்துவம் குறித்த மகாகவியின் பார்வை 



A tribute  to Venezuelan President Hugo Chavez

He died of cancer on last Tues Day(05.03.2013).For the last two years he battled with cancer. Though cancer won him, he won the hearts of millions of people around the world with revolutionary activities .

 We convey our deep condolences to the revolutionary people of Venezuela and his family. He came to power in 1998.Thereafter he had huge support of the people every time he contested in the elections. During December last he was elected as President in fourth time.

He is charismatic leader who brought socialist model Government in Venezuela. Several Latin American Countries emulated his path. The USA, the vanguard and exporter of capitalism to all the nations in the world with the so called policies of Globalisation, Liberalisation and Privatisation through IMF , World Bank and WTO has tried  all methods to oust him out in connivance with  his rivals. He survived all the attempts. His popularity gained enormous proportions with his schemes for the upliftment of the poor. 
The oil-rich country’s wealth was earlier plundered by the multi- national oil companies. He nationalised the oil companies. With the income from the oil resources, he implemented many a health and education schemes to benefit the people. He became a hero for those who are championing the cause of socialism all over the world. He came to India in 2005 and interacted with many cross sections and won their hearts.

He was a fearless fighter against the US hegemony. In one UN session held during the motivated war of the US on Iraq, he called George Bush who attended the yesterday meeting as a Devil. He thundered the smell of the devil’s visit still lingers in the hall.In a glorious tribute paid to Hugo Chavez, the Cuba called him as a true son of Fidel Castro, the the living legend and revolutionary icon.

Though he breathed his last, his legacies will always prevail. He will guide the communists and revolutionaries as a leading light to change the world as he dreamed of .

Friday, February 15, 2013

மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி 'அ ; வரிசை

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊன் மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை

** ஈகை - ஏழைகளுக்குத்  தருவதே ஈகை;
** ஏறு - ஆண் சிங்கம்
** ஔடதம் - மருந்து


Monday, December 24, 2012

நர்ஸ்ஜெசிந்தா சல்தானாதற்கொலை சொல்லும் செய்தி

4 ஆண்டுகளாக லண்டனில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் பணி புரிந்து வந்த 46 வயதான நர்ஸ்ஜெசிந்தா சல்தானா வின் சொந்த ஊர் மங்களூர் . கணவன், 14 வயது மகள், 17 வயது மகனுடன் லண்டனில் உள்ள சவுத் பிரிஸ்டல் பகுதியில் வசித்து வந்தார். 
அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன? 
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்தி மிடில்டன் கர்ப்பம் தொடர்பான தகவல்களை எப்படியாவது சேகரித்து பரபரப்பை ஏற்படுத்த பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் சார்லஸ் பேசுவது போல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2டே பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் மெல் கிரெய்க் மற்றும் மிஷெய்ல் கிறிஸ்டியன் ஆகியோர் பேசிய ஒரு “ஏமாற்று தொலைபேசி அழைப்பு” தான் .ஊடகங்களின் ரெட்டிங் வெறி அநியாயமாக ஒரு நர்சின் உயிரை கொன்றுவிட்டது .அவரின் மரணம் சொல்லும் செய்தி என்ன? யோசிப்போம் . அம்மாதியான ஊடகங்களை தவிர்ப்போம்

A quote from "GLIMPSES OF WORLD HISTORY"

Never do anything in secret or anything that you wish to hide....JAWAHARLAL NEHRU in "GLIMPSES OF WORLD HISTORY" . It is one of the quotation I like most . I always try to follow . Tilll now my efforts are on to achieve it.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்
12.12.2012 -- சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்.அதற்கு முந்திய தினமே மதுரை நகர் சுவர்களில் வண்ணமய போஸ்டர்களும் ,அவற்றின் மீது கற்பனைக்கு எட்டாத வாசகங்களும் கண்டேன் . ஆனால் இவ்வளவு வெறியை ரசிகர்கள் மூளை மீது திணித்ததன் பெரும்பங்கு மீடியாக்களையே சாரும் .
நானும் ரஜினி ரசிகன் தான்..எண்பது தொன்னூறுகளில் ரஜினி படம் ஒன்றுகூட மிஸ் பண்ணியதில்லை. மானாமதுரையில் இருந்தபோதுமனைவியை கேரியரிலும் குழந்தைகளை ஹேண்டு பாரிலும் வைத்துக்கொண்டு ரஜினி படம் பார்க்க சைக்கிளில் சிட்டாகப் பறந்த என் கதை சுவாரஸ்யமானவை . நினைவுகளில் நிரம்பிப் கிடப்பவை ஏன் .தில்லுமுல்லு படத்தை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன் .
ஆனால் இப்ப ரசிகர்கள் பண்ணுவதெல்லாம் ஏனோ எனக்கு ரெம்ப ஓவராய் தெரியுது .

என்ன காரணம் தெரியல.நீங்களாவது சொல்லுங்க .

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

11.12.2012 -- மகாகவி பாரதியின் பிறந்தநாள் . 

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

தமிழால் பலர் பெருமை பெற்றனர் .
ஆனால் பாரதியால் தமிழ் பெருமைபெற்றது .
கடுந்தமிழ் பன்டிதர்களிடமிருந்து தமிழை மீட்டவன்.
பழம்பெருமை பேசிய பாவலர்களிடமிருந்து அவனால் தமிழ் மீண்டது .
புதுமையை வெறுத்த பாவாணர் களிடமிருந்து அவனால் தமிழ் வெளியேறி புதிய கற்றைச் சுவாசித்தது .
கவிதையா ! அது அறிவாளிகள் படித்து ரசிக்கத்தான் !என்ற மாயத்திரையை விலக்கியவன் பாரதி .
பாமரத் தமிழனையும் தமிழ்ச் சுவை அறியவைத்த புதுமைக்கவி .
எங்கள் தமிழ் மொழி ! எங்கள் தமிழ் மொழி ! என்று தமிழ் உணர்வு பொங்க ஓங்கி ஒலித்தவன்.
தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவ பேராசை கொண்டவன் .
வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர் !வாழிய பாரத மணித்திருநாடு !என்று முழங்கிய பாரதி ,
மொழி இனப் பற்றை மீறியவன் . தன் பாட்டுத்திறத்தாலே வையத்தை பாலிக்க நினைத்தவன் .
த்னி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் !
கொடுமை கண்டு கொதிநிலை அடைந்தவன் .
வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்தவன்
எனவேதான் ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சிஎன ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்த்தவன் .
உலகத்துக்கு ஓர் புதுமை இது எனப் பறை சற்றியவன் .
உலகம் முழுதும் அப்புரட்சி பரவ என்கி தவித்தவன்.
அவனது ஆசைக் கனவுகளாகவே உள்ளது .
பாரதி பிடித்த தேர் வடம்நடு வீதியில் கிடக்கிறது .
ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே !

Thursday, September 27, 2012

மகாகவி பாரதியார் பாடல்கள்

Mahakavi Bharathiyar Kannamma song

Panjali Sabatham - Makakavi Bharathiyar 

OnTamil _ Mahakavi Bharathiyar  

Spread Tamil- Mahakavi Bharathiyar 

Monday, August 27, 2012

நாளொரு  செய்தி சொல்வேன்


Thursday, December 15, 2011


                  தமிழ் அன்னை தந்த மகாகவி பாரதியின் பிறந்தநாள் .எட்டயாபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாக டிசம்பர் 11 , 1882 அன்று பிறந்தார். அவரது இயற் பெயர் சுப்பிரமணியன் .செல்லப் பெயர் சுப்பையா .
                       
                 தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவர் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு . அந்த படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறார். 

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே

கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"

                      இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் உங்களுக்கு எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை 

"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !" 

என தொழிலாளர்களை நோக்கி கவி பாடுகிறான்.

                     விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "

                     அது மட்டுமா .தொழிலாளர்களே! நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்களும் , மக்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியும் தருபவர்களும் நீங்களே . எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .

நாட்டில் அறம் கூட்டி வைப்பீரே .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே

தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

                         இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .

பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

                       அது மட்டுமா . "உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .

                        இரஷியாவில் மாமேதை லெனின் தலைமையில் புரட்சி நடந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததை வரவேற்று பாடிய மகாகவி பாரதி

"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".

                       என்று ஆனந்த கூத்தாடுகிறான். .பாரதிதனி   ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் அல்லவா . எனவே .கொடுமை கண்டு கொதிநிலை அடைந்த அவன் .வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.எனவேதான் "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்து பாடுகிறான். ."உலகத்துக்கு ஓர் புதுமை" என அப்புரட்சியைப் பறை சாற்றுகிறான். .உலகம் முழுதும் அப்புரட்சி பரவ ஏங்கி தவிக்கிகிறான். தொழிலாளர் தலைமையிலான ஆட்சியில் தான்எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான்

                       1600 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை வெள்ளையகளின் அடிமையாக்கியது வரலாற்று உண்மை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? இப்போது வெள்ளைகார கம்பனிகளுக்கு எல்லா சலுகைகளையும் அள்ளி வழங்கி வெண்சாமரம் வீசி வரவேற்கிறது மத்திய அரசு. உள்ளூர் தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது மத்திய அரசு . ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை . அதற்கு காரணம் இந்திய தொழிலாளர்கள் ஜாதி, மத ,அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் , வர்க்க உணர்வின்றி நொந்து கிடப்பதுவுமேயாகும் .எனவே பாரதி கண்ட கனவுலகம் படைத்திட " சிலர் வாழ, பலரை வாடவைக்கும்" மத்திய அரசின் பொருளாதரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமையுடன் கூடிய ஒற்றுமை நமக்கு மிக அவசியம். "ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை போர் பரணியாகப் பாடுவோம்.

“பாரதி பிடித்த தேர்வடம் நடு
வீதி கிடக்கிறது- அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால்  தேர் நடக்கும் - அன்றேல்
வெய்யில்  மழையில் கிடக்கும்"

                           என்ற பரிணாமன் கவதையை மகாகவி பாரதியாரின் இன்றைய பிறந்த நாளில் நினைவு கூர்வோம். அவன் பிடித்து விட்டு சென்ற தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே.

குறிப்பு:
இந்து மத புராணங்களும், சாஸ்திரங்களும் காலத்தை யுகமாக பிரித்துள்ளனர்.
கிருத யுகம் - அறம், உண்மை நிறைந்த யுகம். வறுமையில்லை, துயரமில்லை.எங்கும் மகிழ்ச்சி தவழும் யுகம். இந்த யுகத்தில்அறக்கடவுளுக்கு நான்கு கால்கள் உண்டு. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுவதுண்டு.
எனவேதான் பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது
"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"
என்கிறான். இரஷியப் புரட்சி மக்களுக்கு கிருத யுகம் வந்துவிட்டதாக பழமையோடு புதுமையைப் பொருத்துகிறான்
திரேதா யுகம் - அறக்கடவுள் தன் ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார் .இராமன் அவதாரம் செய்ததது இந்த யுகத்தில் தான்
துவாபர யுகம்--அறக்கடவுள் தன் இரு கால்களை இழந்து இரண்டு கால்களுடன் இருப்பார் .மஹாபாரதம் நடந்தது இந்த யுகத்தில் தான்
கலியுகம்--அறக்கடவுள் தன் மூன்று கால்களை இழந்து ஒரு காலுடன் இருப்பார் .