மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, July 12, 2020

The quotes I Like most

The quotes I Like most from Frederick Douglass
and  Henry Drummond


Frederick Douglass was an American social reformer, abolitionist, orator, writer, and statesman. After escaping from slavery in Maryland, he became a national leader of the abolitionist movement in Massachusetts and New York, gaining note for his oratory and incisive antislavery writings


Prof Henry Drummond  (17 August 1851 – 11 March 1897) was a Scottish evangelist, biologist, writer and lecturer. Many of his writings were too nicely adapted to the needs of his own day to justify the expectation that they would long survive it, but few men exercised more religious influence in their own generation, especially on young men. His sermon "The Greatest Thing in the World" remains popular in Christian circles.


America is false to the past, 
false to the present, 
and solemnly binds herself 
to be false to the future. 
.......Frederick Douglass



I prefer to be true to myself, 
even at the hazard of incurring 
the ridicule of others, 
rather than to be false, 
and to incur my own abhorrence. 
......Frederick Douglass






“To love abundantly is to live abundantly, 
and to love forever is to live forever. 
Hence, eternal life is inextricably bound up with love, 
the  Greatest Thing in the World.”
....... Henry Drummond



Sunday, June 28, 2020

செந்தமிழ் நாட்டின் பெருமையும், தமிழர்களின் வீரமும் - மகாகவி பாரதியார்

செந்தமிழ் நாட்டின் பெருமையும், தமிழர்களின் வீரமும் - மகாகவி பாரதியார் 

            செந்தமிழ் நாடு -1/5

செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே -எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
.வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.

           












































           செந்தமிழ் நாடு-2/5

காவிரி தென்பெண்ணை பாலாறு -தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி -என
மேவி ஆறு பலவோடத் -திரு
மேனி செழித்த தமிழ்நாடு.(செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே -நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு -செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -அவை
யாவும் படைத்த தமிழ்நாடு




செந்தமிழ் நாடு--3/5


நீலத் திரைக்கடல் ஓ ரத்திலே -நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு


கல்வி சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.


செந்தமிழ் நாடு--4/5

வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் -மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.

சிங்களம் புட்பகம் சாவக -மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி -அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் -நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.






செந்தமிழ் நாடு--5/5           

விண்ணை யிடிக்கும் தலையிமயம் -எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் -சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார் -தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

சீன மிசிரம் யவனரகம் -இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் -மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.




Saturday, June 27, 2020

Quote by Mahatma Gandhi




A quote by Marcus Garvey


A quote I like most. We must know our roots. Unless we are aware of the history ,origin of our family  , the struggles of our early generations to reach a present level,  we will not have an idea how we have to improve further. We must see our roots and stand on our own legs . Then we will also become roots for our posterity 







Thursday, June 11, 2020

மனமே வீணே உழலுதல் வேண்டா - மகாகவி பாரதி


மனமே எனை வாழ்வித்திடுவாய் !
வீணே உழலுதல் வேண்டா !!

யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய்,
வாழ்ந்திட விரும்பினேன்;மனமே! நீயிதை
ஆழ்ந்து கருதி ஆய்ந் தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறி நான் சித்திபெற் றிடவே.
நின்னால்  இயன்ற துணைபுரி வாயேல்

              "விநாயகர் நான்குமணிமாலை"யில்
                         மகாகவி பாரதியார்

Mahakavi Bharathiyar poems
                      

Monday, June 08, 2020

பாரதி சொன்ன புதிய விதி எது தெரியுமா உங்களுக்கு


பாரதி சொன்ன புதிய விதி 
எது தெரியுமா உங்களுக்கு 

 இனியொரு விதி செய்வோம்-அதை
      எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்கு உணவிலை எனில்
      ஜகத்தினை அழித்திடு வோம்.
                             
                     ...மகாகவி பாரதியார்
Ini oru vithi seyvom -Mahakavi Bharathiyar 

 எங்கள் வாழ்வில் இவை இனி  இல்லை


மனிதர்  உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மில் அந்த
வாழ்க்கை இனியுண்டோ?


                      ..மகாகவி பாரதியார்

Manithar unavai manithar parikkum - Mahakavi Bharathiyar 

Sunday, June 07, 2020

மகாகவி பாரதியார் வசனக் கவிதை - காற்று -2


                    காற்றே வா
காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு,
மனத்தை  மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா.
இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த ப்ராண ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து
நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி, அதனை  மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன்,
நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்


மகாகவி பாரதியார் வசனக் கவிதை - காற்று


          காற்றே வா
காற்றே வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே.
 காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே
பார்த்தாயா? இதோ,தள்ளிவிட்டாய்,
 புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி
வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்
Mahakavi Bharathiyar Vasanak Kavithai -Kaatru 


Monday, May 25, 2020

Greetings message for Ramzan 2020

Greetings message for Ramzan 2020


Due to Novel Corona virus Pandemic, Ramzan is different this time. No traditional celebration with much fanfare. There are no iftar gatherings . Prayer is confined  at homes only with family members instead in mosques with a large gathering. 

Despite all these things , the core  principle  for celebration of Ramzan remains intact .As usual , fasting during Ramzan makes one to commit  help the poor and the needy during the lockdown.

 As a powerful symbol of unity , Ramzan gives hope that the humanity will win over the Pandemic and march ahead spreading love and  kindness among the  fellow human beings.

Happy and prosperous Ramzan to you and all family members. Ed Mubarak.

...P.Sermuga Pandian
Madurai

Saturday, May 02, 2020

மேதின செய்தி 2020

*மேதின வாழ்த்துக்கள் - 2020* 
       
.அமெரிக்காவின் சிக்காகோவின் நகரில் தொழிலாளி வர்க்கம் போராடி சிந்திய ரத்தத்தில் நாம் பெற்ற உரிமை தான் எட்டுமணி நேர வேலை நேரம் காலம் ஏதுமின்றி தொழிலாளர்களை கசக்கி  பிழிந்து வந்த முதலாளிகளின் கொடுமையை இப்போராட்டமே முடிவுக்கு கொண்டு வந்தது .எட்டுமணி நேர வேலை உரிமையானது. ஆனால் சோவியத் யூனியன் சரிவுக்கு பின்னர் வேர்விட்ட உலகமயம் ,தனியார்மயம் தாராளமயம் போன்ற கொள்கைகள் எட்டு மணி நேர வேலை என்ற தொழிலாளர்  உரிமைக்கு சாவுமணி அடித்துள்ளது .

பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் இந்திய தொழிலாளி வர்க்கம் ரத்தம்  சிந்திப்  போராடிப்  பெற்ற  உரிமைகளும்,  சலுகைகளும் ஏராளம்.    அவை தொழிலாளர் நலம் காக்கும் சட்டங்களாக அமையப் பெற்றுள்ளன.  அம்மாதிரி உள்ள 44 சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை   
1. Industrial Disputes Act 1927 (தொழிற் தகராறு சட்டம் ) 
2. Trade Union Act 1927 ( தொழிற் சங்க சட்டம்) 
3. Minimum Wages Act 1948 ( குறைந்த பட்ச கூலி சட்டம் )
4. Bonus Payment Act 1965 ( போனஸ் பட்டுவாடா   சட்டம்)
இந்த சட்டங்களே  தொழிலாளர்களின் பாதுகாப்பு  அரணாக விளங்குகின்றன. "Ease of doing Business" என்ற பெயரில் அதாவது "முதலாளிகள் தொழில் செய்வதை எளிமையாக்க" தொழிலாளர்களின் பாதுகாப்பையும், தொழிற்சங்க உரிமைகளையும் காவு தர முடிவு செய்த  பி.ஜே பி யின் *மோடி தலைமையிலான மத்திய அரசு “தொழிலாளர்கள்  நல சீர்திருத்தம்” என்று சொல்லி 44 Acts (சட்டங்களை) 4 லேபர் கோடுகளாக ( Labour Codes) சுருக்கி விட்டது அவை.

 1..Labour Code on  Industrial Relations Code, 2019
2 Labour Code on Wages, 2019
3.Labour Code on Social Security, 2019 
4.Labour Code on Occupational Safety, Health and Working Conditions Code, 2019

தொழிற்சாலைகள்    உள்ளிட்ட  பெரு  நிறுவனங்களில்  பணிசெய்யும்  75 % உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட சங்கங்களுக்கு மட்டுமே இனி தொழிற்சங்க அங்கீகாரம்  தரப்படும்.  அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கும்  தொழிலாளர்களின் 75% ஆதரவு பெற்ற     அங்கீகாரம்  பெற்ற     தொழிற்சங்கமாக     செயல்படுவது  இனி  எந்த அமைப்பிற்கும் சாத்தியமில்லை.  தொழில் செய்வதை  எளிமையாக்குகிறோம்  என்று சொல்லும்    அரசின்    தீய  நோக்கமே    தொழிலாளர்களின்  பாதுகாப்பை  சீர்கேடு செய்வதும்      தொழிற்சங்கங்களை   முடக்குவதும்      தான்      என்பதை   நாம் உணரவேண்டும்.  இதுபோன்ற  தொழிற் சங்க சீர்கேடு  சட்டங்களை மத்திய  மாநில அரசு   ஊழியருக்கும் நீட்டித்தால்   அரசு   ஊழியர்   நலம் காக்க   தொழிற் சங்கம் நடத்துவதே      மிகச்  சிக்கலாகி  விடும்.    

எனவே,    இதுகாறும்    போராடிப்  பெற்ற உரிமைகளைப் பறிக்கும்  Labour Code களை மத்திய அரசு  திரும்ப பெற செய்ய மீண்டும் ஒரு வலிமைமிக்க போராட்டத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் இறங்க வேண்டிய அவசியத்தை தொழிற்சங்கங்களும் அவை சார்த்த தொழிலாளர்களும் இந்த மேதினத்தில் உணரவேண்டும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துகிறோம்  என்று சொல்லி எந்த வித திட்டமுமின்றி மத்திய மாநில அரசுகள் அறிவித்த லாக்டவுனால்  கோடிக்கணக்கான தொழிலாளர்கள்   வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .  லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த பேரிடர் காலத்தில்எவ்வித  பொருளாதர உதவிகளையும்  மத்திய  அரசு செய்யவில்லை  . மேலும் மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களின் DA  வை முடக்கிவைக்கப்பட்டுள்ளது  . ஆனால் பெருமுதலாளிகள்  வங்கிகளிடம் பெற்ற  69000 கோடி  ரூபாயை தள்ளுபடி செத்துள்ளது  மத்திய அரசு .  அரசின்  கருணை முதலாளிகளுக்கே கிடைக்கிறது . தொழிலாளிகளின் மீது பாராமுகம் காட்டுகிறது  . 

 தொழிலாளர்கள்  இதுவரை போராடிப்பெற்ற உரிமைகளை மீட்டெடுக்கவும் , லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்கவும்  இந்த மேதினத்தில் தொழிலாளர்களும்  , தொழிற்சங்கங்களும்   இந்த 
 மே தினத்தில் சபதமேற்போம்

...ப.சேர்முக பாண்டியன்
முன்னாள் பி3 சங்க செயலர்
NFPE, SIVAGANGAI
@மதுரை

Friday, March 13, 2020

அச்சமில்லை அச்சமில்லை

Men are women's children and we mother them again

Men are women's children and we mother them again

1912ல் அமெரிக்காவிலுள்ள லாரன்ஸ் நகரில் நெசவு தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவாக  "எங்களுக்கு  ரொட்டியோடு ரோஜாக்களையும் கொடு" என்ற பதாகைகளை ஏந்தி பெண்கள் மிகப் பெரிய பேரணி நடத்தினர். எனவே அந்தப் போராட்டம் " *Bread and Roses strike* " என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பேரணியில் பெண்கள்  முழக்கிய கவிதையின் சில வரிகள் இதோ கீழே.

 As we come marching, marching, we battle, too, for men-

 For they are women's children and we mother them again

 Our lives shall not be sweated from birth until life closes

 Hearts starve as well as bodies; Give us Bread, but give us Roses!

எது புண்ணியம்


எது புண்ணியம் என்கிறான் மகாகவி பாரதி?  

அன்ன தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்குமா.? அன்ன தானம் செய்வதத்தெல்லாம் அந்த நேரத்தில் பசிப்போர்க்கு பசியை போக்கும். .அவ்வளவு தான். .ஆனால் ஒருவனுக்கு கல்வி தந்தால் அவனுக்கு மட்டுமல்ல அவன் தலைமுறைக்கே சோறுபோடும்.
எனவே ஏழை ஒருவனுக்கு தரும் கல்வியே உண்மையிலேயே புண்ணியம் தரும் செயல் என்கிறான் மகாகவி பாரதி.

Thursday, March 05, 2020

காதலின் புகழ் -- மகாகவி பாரதியார்


              காதலின் புகழ் -2
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங் கற்பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற்பு என்று உலகோர்  கதைக்கின்றாரே?
                         ----- மகாகவி பாரதியார்


                காதலின் புகழ்- 3
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழி செய்கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடர் எய்திக்  கெடுகின்றாரே
                         -----  மகாகவி பாரதியார்



காதலின் புகழ்- மகாகவி பாரதியார்

                                       காதலின் புகழ்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
                                              மகாகவி பாரதியார்