காதலர் தினம் |
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் உச்சம் தொட்ட இந்த காலத்தில் , முதலாளித்துவத்தின் விற்பனை சூழ்ச்சியின் ஒரு அங்கமாக இன்று காதலுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று காதல் .அதற்கு விளம்பரம் எதுக்கு தேவை? . தனி மனிதர்களில் உணர்வில் விளையும் காதல் மீது ஏன் இந்த விளம்பர பூச்சு . வணிகம் நோக்கமாக இருந்தாலும் இந்த கொண்டாட்டத்தையும் ஏற்றுக் கொள்வதே சரியானதாகும்.இது கால மாற்றத்தின் விளைவு. யாரும் தடுக்க முடியாத ஒன்று
சங்க காலமாக இருந்தாலும் சரி இந்த நவீன காலமாக இருந்தாலும் சரி. மனித குலத்தில் காதல் உணர்வு என்றும் மாறாத ஒன்று . ஆனால் அதை அடைய துடிப்பவர்,அது ஆணோ பெண்ணோ , அவர்கள் கடைபிடிக்கும் நடை முறைகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல .கால வகையினானே" என்கிறது நன்னூல் சூத்திரம். "வழு அல" என்றால் குற்றம் இல்லை என்று அர்த்தம் .மாற்றம் என்பது காலம் தரும் விந்தையான கொடை
.
"செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!செவ்விது செவ்விது காதல்! காதலினால் உயிர் தோன்றும் - இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்! காதலினால் அறிவெய்தும் - இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்".என்று காதலின் பெருமையை போற்றுகிறேன் மகாகவி பாரதி .
காதலே மனிதகுலத்தை நீடிக்கசெய்யும் அற்புத சக்தி . அதை இன்று மட்டுமல்ல, என்றும் போற்றுவோம் காதலை . .காதல் வாழ்க என்று கூத்தாடுவோம்
No comments:
Post a Comment