பாரதியின் கவித்துவம் அற்புதம்! அற்புதம்!! . இயற்கையை ரசிப்போம்! இன்புற வாழ்வோம்!! .
சூதாட அழைத்த துரியோதனின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் பாஞ்சாலியோடு பயணிக்கின்றனர் . மாலை மயங்கும் நேரம். பகலெல்லாம் உழைத்த களைப்பு கதிரவனுக்கு. தனது வண்ண வனப்பை எல்லாம் புவிக்கு ஒரு சேர காட்டிச் செல்வோமே என கனன்று சுழன்று ஆடுகிறான். பாண்டவர் சேனை ஒய்வு எடுக்கிறது . பாஞ்சாலியை தனியே அழைத்துச் செல்கிறான் பார்த்தன். அங்கே ஒரு பசும்புல் மேட்டில் அமர்கின்றனர். பாஞ்சாலி அவனது தொடை மீது சாய்ந்து பால் போல் மொழி பிதற்றுகிறாள் .ஆனால் பார்த்தனுக்கு ஈர்ப்பெல்லாம் மாலை நேர சூரியனின் வர்ண ஜாலம் மீதுதான் .அவளை நோக்கி அதன் எழில் நயத்தை விளக்குகின்றான். பாரதியின் கவித்துவம் அற்புதம்! அற்புதம்!! . இயற்கையை ரசிப்போம்! இன்புற வாழ்வோம்!! .
‘பார்; சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ!
என்னடீ! இந்த வன்னத்து இயல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! -பாரடீ!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை இட்ட
கருஞ் சிகரங்கள்! -காண்டி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’
எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ!
என்னடீ! இந்த வன்னத்து இயல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! -பாரடீ!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை இட்ட
கருஞ் சிகரங்கள்! -காண்டி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’
பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment