*மேதின வாழ்த்துக்கள் - 2020*
.அமெரிக்காவின் சிக்காகோவின் நகரில் தொழிலாளி வர்க்கம் போராடி சிந்திய ரத்தத்தில் நாம் பெற்ற உரிமை தான் எட்டுமணி நேர வேலை நேரம் காலம் ஏதுமின்றி தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வந்த முதலாளிகளின் கொடுமையை இப்போராட்டமே முடிவுக்கு கொண்டு வந்தது .எட்டுமணி நேர வேலை உரிமையானது. ஆனால் சோவியத் யூனியன் சரிவுக்கு பின்னர் வேர்விட்ட உலகமயம் ,தனியார்மயம் தாராளமயம் போன்ற கொள்கைகள் எட்டு மணி நேர வேலை என்ற தொழிலாளர் உரிமைக்கு சாவுமணி அடித்துள்ளது .
பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் இந்திய தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற உரிமைகளும், சலுகைகளும் ஏராளம். அவை தொழிலாளர் நலம் காக்கும் சட்டங்களாக அமையப் பெற்றுள்ளன. அம்மாதிரி உள்ள 44 சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை
1. Industrial Disputes Act 1927 (தொழிற் தகராறு சட்டம் )
2. Trade Union Act 1927 ( தொழிற் சங்க சட்டம்)
3. Minimum Wages Act 1948 ( குறைந்த பட்ச கூலி சட்டம் )
4. Bonus Payment Act 1965 ( போனஸ் பட்டுவாடா சட்டம்)
இந்த சட்டங்களே தொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. "Ease of doing Business" என்ற பெயரில் அதாவது "முதலாளிகள் தொழில் செய்வதை எளிமையாக்க" தொழிலாளர்களின் பாதுகாப்பையும், தொழிற்சங்க உரிமைகளையும் காவு தர முடிவு செய்த பி.ஜே பி யின் *மோடி தலைமையிலான மத்திய அரசு “தொழிலாளர்கள் நல சீர்திருத்தம்” என்று சொல்லி 44 Acts (சட்டங்களை) 4 லேபர் கோடுகளாக ( Labour Codes) சுருக்கி விட்டது அவை.
1..Labour Code on Industrial Relations Code, 2019
2 Labour Code on Wages, 2019
3.Labour Code on Social Security, 2019
4.Labour Code on Occupational Safety, Health and Working Conditions Code, 2019
தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணிசெய்யும் 75 % உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட சங்கங்களுக்கு மட்டுமே இனி தொழிற்சங்க அங்கீகாரம் தரப்படும். அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களின் 75% ஆதரவு பெற்ற அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமாக செயல்படுவது இனி எந்த அமைப்பிற்கும் சாத்தியமில்லை. தொழில் செய்வதை எளிமையாக்குகிறோம் என்று சொல்லும் அரசின் தீய நோக்கமே தொழிலாளர்களின் பாதுகாப்பை சீர்கேடு செய்வதும் தொழிற்சங்கங்களை முடக்குவதும் தான் என்பதை நாம் உணரவேண்டும். இதுபோன்ற தொழிற் சங்க சீர்கேடு சட்டங்களை மத்திய மாநில அரசு ஊழியருக்கும் நீட்டித்தால் அரசு ஊழியர் நலம் காக்க தொழிற் சங்கம் நடத்துவதே மிகச் சிக்கலாகி விடும்.
எனவே, இதுகாறும் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் Labour Code களை மத்திய அரசு திரும்ப பெற செய்ய மீண்டும் ஒரு வலிமைமிக்க போராட்டத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் இறங்க வேண்டிய அவசியத்தை தொழிற்சங்கங்களும் அவை சார்த்த தொழிலாளர்களும் இந்த மேதினத்தில் உணரவேண்டும்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்லி எந்த வித திட்டமுமின்றி மத்திய மாநில அரசுகள் அறிவித்த லாக்டவுனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த பேரிடர் காலத்தில்எவ்வித பொருளாதர உதவிகளையும் மத்திய அரசு செய்யவில்லை . மேலும் மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களின் DA வை முடக்கிவைக்கப்பட்டுள்ளது . ஆனால் பெருமுதலாளிகள் வங்கிகளிடம் பெற்ற 69000 கோடி ரூபாயை தள்ளுபடி செத்துள்ளது மத்திய அரசு . அரசின் கருணை முதலாளிகளுக்கே கிடைக்கிறது . தொழிலாளிகளின் மீது பாராமுகம் காட்டுகிறது .
தொழிலாளர்கள் இதுவரை போராடிப்பெற்ற உரிமைகளை மீட்டெடுக்கவும் , லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்கவும் இந்த மேதினத்தில் தொழிலாளர்களும் , தொழிற்சங்கங்களும் இந்த
மே தினத்தில் சபதமேற்போம்
...ப.சேர்முக பாண்டியன்
முன்னாள் பி3 சங்க செயலர்
NFPE, SIVAGANGAI
@மதுரை