மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, July 09, 2019

தனிப் பாடல்கள் 16. புயற் காற்று- மகாகவி பாரதியார் - Bharathiyar songs/ quotes


மகாகவி பாரதியார் பாடல்கள் படங்களாக - 
Bharathiyar songs in image files 

3. தனிப் பாடல்கள்
16. புயற் காற்று-  மகாகவி பாரதியார் 

நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
ஒரு கணவனும் மனைவியும்

மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்குதேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.

மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?


No comments:

Post a Comment