மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, December 11, 2018

பாரதியின் பார்வையில் கல்வி



பாரதியின் பார்வையில் கல்வி


  
இன்று ( 11.12.2018)  மகாகவி பாரதியாரின் 136 வது பிறந்தநாள் . பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழை மீட்டு  பாமரத் தமிழனிடம் கொண்டு சேர்த்தவன் பாரதி .
ஒரு இனத்தை சமூகத்தை அடக்கி ஒடுக்கி அறியாமையிலேயே வைத்திருக்க அவர்களுக்கு கல்வியை முழுமையாக மறுக்க வேண்டும் ; அதன் வாசனை கூட அவர்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் மிகக்  கவனமாக இருந்தனர் ஆதிக்க சாதியினர் .

மகாகவி வாழ்ந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமையாக  இருந்த இந்தியாவில் . மக்கள் அறியாமையிலும் வறுமையிலும் உழன்றனர் . ஜாதிய வெறியும் ஒடுக்குமுறையும் பேயாட்டம் போட்ட காலம். .கல்வி மூலமே அடிமைப்பட்ட மக்களும்  , பெண்களும்    .உயர்நிலை எய்துவர் என்று நினைத்தான் பாரதி .

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

 என்கிறான் மகாகவி . கல்வி மூலமே உயர்வு காணமுடியும் என்பதை அழுத்த மாக சொல்கிறான் அவன்

ஆயுதம்செய்வோம் நல்லகாகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம்;
ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம்

இந்தியா முழுதும் கல்விச்சாலைகள் வைப்போம் என் கனவு காண்கிறான். அதன் மூலம் அறியாமையிருந்து அவர்களின் விடுதலையை  உறுதி செய்யலாம் என ஏங்குகிறான் பாரதி . 
வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
நகர்களெங்கும் பலபலபள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்.

தனது புதிய ஆத்திசூடியில் "ரௌத்திரம் பழகு" என்று நமக்கு சொன்னவன் அல்லவா  பாரதி  . எனவே மக்களுக்கு கல்வி வழங்கும்  பள்ளிக்கூடங்கள் இல்லாத ஊரை தீயிட்டு கொளுத்துவோம் என பொங்கி எழுகிறான் . வீதிக்கு இரண்டு பள்ளிகள் வேண்டும் என  பேராசை படுகிறான் .

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
 பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்கிறான் பாரதி . , கோவில் கட்டித்தருதல் ; அன்ன  தானம் செய்தல் உள்ளிட்ட  எல்லா  தர்ம செயல்களை விட  புண்ணியம் தருவது எது தெரியுமா ? என கேள்வி கேட்டு அதற்கு விடையையும் சொல்கிறான் பாரதி. ஒரு ஏழைக்கு கல்விக் கண் திறப்பதே எல்லா தர்மங்களிலும் சிறந்தது என ஓங்கி ஒலிக்கிறான் .

நாடு விடுதலை பெற்றபின் எப்படியெல்லாம் வாழ்வோம்  என்கிற கற்பனையில்

திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே

என்கிறான் பாரதி. சிறப்பான கல்வி மூலம் ஞானம் பெற்று நாங்கள் வாழ்வோம் இந்த நாட்டினில் என கற்பனை செய்கிறான் பாரதி
மேலும் அவனது கற்பனை விரிகிறது .
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே

செல்வத்தை தருகிற ; மன மகிழ்ச்சி தருகிற , பிணக்கமின்றி ஒருவரை ஒருவர் கூடி வாழவைக்கிற  கல்வி மூலம் மக்கள் அனைவரும் சமம் என்ற சிந்தனை மேலோங்கி நாங்கள் வாழ்வோம் என்கிறான் பாரதி .

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்தமதி ,கல்வி- அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்


என் பாப்பா பாட்டில் நீதியை உயர்த்திப் பிடிக்கும் அறிவும், கல்வியும் அன்பும் நிறைய உடையவர்களே பெரியவர்கள் . ஏற்றத்தாழ்வை  கற்பிக்கும் சாதிகள் இல்லை என குழந்தைகளுக்கு சொல்லும் பாரதி யார் பெரியவர்கள் என்பதையும் அழுத்தமாக சொல்கிறான் .

பெண்களுக்கு கல்வி கற்பித்தால் விதவை ஆகிடுவார்கள் என்ற மூட சிந்தனை அடி மூளையில்  ஆழமாக பதித்து விடப்பட்டிருந்தது அப்போது  . பெண் ஆணுக்கு சேவை செய்ய மட்டுமே பிறந்தவள் ; அவள் பிள்ளை பெறும் இயந்திரம் ; என்றே கருதப்பட்டனர். பெண் படிக்க விரும்பினால் அடுப்பூதும்  பெண்ணுக்கு படிப்பு எதற்கு என்ற எதிர்கேள்வி கேட்டனர்

ஏட்டையும் பெண்கள் தொடுவது  தீமை
என்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

 என பெண்ணுக்கு கல்வி மறுப்பவர்களை கடுமையாக சாடுகிறான்.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி

ஆணுக்கு பெண் அறிவிலும் திறமையிலும்  கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை எனச்  சொல்லி பெண்களை ஊக்குவிக்கிறான் .

அவரது தந்தை பாரதியை ஆங்கிலக் கல்வி கற்க திருநெல்வேலிக்கு அனுப்புகிறார் . ஆங்கிலக் கல்வி பாரதிக்கு மகிழ்ச்சி தரவில்லை . "அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோ "என்கிறான் பாரதி ;  அதை "அல்லல் மிக்கதொரு மண்படு கல்வி"  என்று வெறுக்கிறான் .
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

இவை யாவும் அறியாமால்  ஆங்கிலக் கல்வி பயின்ற மற்றவர்களை
 "பேடிக் கல்வி பயின்று  உழல் பித்தர்கள்," என்று அழைக்கிறான் பாரதி .
.
மாந்தர் பாற் பொருள் போக்கி பயின்றதாம்
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை .

கல்வி என்பது மடமை நீக்கத்தான் . ஆனால் ஆங்கிலக் கல்வி முறையை மடமைக் கல்வி என்கிறான் பாரதி .
ஆங்கிலக் கல்வியால் என்  . தந்தைக்கு செலவு ஆயிரம்.;  எனக்கு ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை ,பல்லாயிரம் தீமைகள் எனக்கு வந்தன என்பதை இந்தக் கோவிலிலும் சத்தியம் செய்து சொல்வேன் என்கிறான் பாரதி. துயரம் தந்த ஆங்கிலக் கல்வி  தந்தைக்கும் , தனயனுக்கும் என்ன செய்தது என்பதை பாரதியின் வரிகளில் படியுங்கள்
செலவு  தந்தைக்கோர்   ஆயிரஞ் சென்றது;
தீது  எனக்குப் பல்லாயிரம்  சேர்ந்தன;
நலமோர்  எட்டுணையும்  கண்டிலேன் - இதை
நாற்பதாயிரம்  கோயிலிற் சொல்லுவேன்.

கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும்.  .அதன் மூலமே நம் தமிழ் மொழியின் கலாச்சாரம் , இலக்கியம் பண்பாடு போன்றவற்றின்  அருமை பெருமைகளை நாம்  அறிய முடியும் என்பதை பாரதி தெள்ள தெளிவாக சொல்கிறான் ..

பாரதியின் பார்வையில் கல்வி என்பது மனிதனை செழுமைப் படுத்தக்  கூடியதாக  இருக்க வேண்டும் .அது  ஒழுக்கத்தையும் சமூக அக்கறையையம் ஊட்ட வேண்டும் . பயனுள்ள மனிதனாய் இந்தப் பாரில்  வாழ  அது துணை செய்ய வேண்டும். எனவே தான்  புதிய கோணங்கி என்ற பாட்டில்
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்

என்கிறான் . கல்வி கற்றுத்  தேறியவன் சூது  செய்தால் நாசமாகப் போவான் என சபிக்கிறான் . ஆனால் இப்போது படித்தவன் தான் எல்லா தவறுகளுக்கும் ஸ்கெட்ச் போட்டுத்  தருகிறான் .


  சுதந்திர இந்தியாவில்  கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை  பாரதியின் பார்வையில் கண்டோம். ஆனால் இப்போது  நம் நாட்டில் , தமிழகத்தில் உள்ள  கல்வி முறை எப்படி இருக்கிறது ? என்ற கேள்விக்கு வேதனையே பதிலாக கிடைக்கிறது . தமிழ் வழிக்கல்வி என்பதற்கான முக்கியத்துவம்  இங்கு குறைந்து கொண்டே வருகிறது . .காசு பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி; ஒழுக்கம் ; பண்பு , சமூக அக்கறை போன்றவற்றை போதிப்பது அதன் வேலை இல்லை ; என்ற நிலையை இப்போதைய கல்விமுறை எட்டிவிட்டது .

மகாகவி பாரதி சுதந்திர இந்தியாவில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தானோ  அது மாதிரியான கல்வி முறை வராத வரை நமக்கு விடிவில்லை . கல்வி குறித்த பாரதியின் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம் . அவனது சிந்தனை  விதைகளை தூவுவோம்…..





























Wednesday, August 08, 2018

Tribute to Doctor Kalaignar Karunanidhi


Tribute to Doctor Kalaignar Karunanidhi
3 June 1924 – 7 August 2018
  

 In my view , there are two types of people in Tamilnadu. One who is supporting Kalaignar Karunanidhi or one who is opposing Kalaignar Karu for  his contributions to Tamils and Tamil Language and for his measures to achieve   social justice .He was a non-believer till he breathed his last.  But it is ironical that   his supporters prayed in temples, mosques and churches for his long life. Such was his popularity .
nanidhi. Even his opponents held him in esteem

With the passing away of Kalaignar Karunanidhi an epoch comes to an end in the political firmament  of Tamilnadu. His oratory and writing skills were  unparalleled  . His wrote dialogues for many films . Of these,  his dialogues for  the movie “ Paraasakthi”   roused up  Tamils  consciousness for  Self-respect ,Social Justice and secularism.  He was instrumental in making Tamilnadu a socially progressive state . He had  “Thanthai Periyar”  and “ Perarignar Annadurai”  as his  mentors . While he was the Chief minister , as a  honest disciple to his mentors, he   implemented progressive schemes aimed  at  social equality  .He brought legislation for reservation for women in Government jobs. He declared May day as holiday in Tamilnadu for state Government staff and other establishments.    He was the president of the party for nearly 50 years. He won all the  13  assembly elections he contested. Never lost even for a single time. 

His academic records may be poor but he was  an outstanding literary figure with rich  knowledge on Tamil literature. His unique style of   writing the   language in flamboyant and beautiful way won many hearts. His writings on Tamil literature enthused the youth and goaded them to read old Tamil literature. They made Tamils to feel pride of their language and culture

His administrative skills in taking swift decisions were awe-inspiring to the bureaucrats who worked with him. He was known for his political acumen in making accurate calculation of election arithmetic. He was multi-faceted and multi-talented personality. His memory power was amazing that he would recollect minute details of anything on any occasion.

Adept in punning with words, his replies   in the assembly and for the press were full of wit and wisdom  . He was writer, poet, orator and politician .He imprinted his marks whatever field he entered. He became a history now .He fought all the time for reservation for the  uplift of the underprivileged. In his death too he fought a place in Marina and won.  Let his soul rest in peace and guide  to uphold secularism and caste-amity in Tamilnadu 




Tuesday, July 10, 2018

தமிழர் தந்தை ஐயா பெரியார் 
தந்தை பெரியார்தமிழகத்தில் அவர் பிறந்திராவிட்டால்..... மூடப் பழக்க வழக்கங்களில் நாம் முங்கி கிடந்திருப்போம். சமூக நீதி பற்றிய சொரணை வந்திருக்காது நமக்கு. மதச்சகிப்புத்தன்மை நம்மிடம் வளர்ந்திருக்காது. பெண் விடுதலை பற்றிய சிந்தனை நம்மில் வேர் விட்டுருக்காது.

அநீதிகளுக்கு எதிராக போராடும் குணம் நம்மிடம் செழித்திருக்காது.

தனித்துவம் மிக்க பழந்தமிழ் மொழியை உடையவர்கள் என்ற பெருமையான எண்ணம் நம்மிடம் ஏற்பட்டிருக்காது
உ.பி ,பீஹார் போலவே மதவெறி கூட்டமாய் தமிழர்கள் இருந்திருப்பர். மிகவும் பின்தங்கிய மாநிலமாய் தமிழகம் இருந்திருக்கும்.
எனவே தமிழர்களாகிய நாம் பெரியாரை மென்மேலும் கற்போம்.சுயமரியாதை பெறுவோம் ; தன்மானத்தோடு வாழ்வோம்

Monday, July 09, 2018

மகாகவி பாரதியின் புதிய கோணங்கி -2


மகாகவி பாரதியின் புதிய கோணங்கி

Add caption

First death anniversary of Com.D.Gnaniah - Postal and Telecom Comrades paying tributes to him on 08.07.2018 at Coimbatore

Postal and Telecom Comrades paying tributes to Com D Gnaniah  on 08.07.2018 at Coimbatore along with his daughter

Manamadurai Postal comrades are paying tributes  on 08.07.2018 at Coimbatore

இன்று ( 08.07.2018) தோழர் டி.ஞானையா அவர்களுக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி தினம்

இன்று ( 08.07.2018) தோழர் டி.ஞானையா அவர்களுக்கு  முதலாண்டு நினைவு அஞ்சலி தினம் 

 அவர் பற்றி  இந்த நினைவு அஞ்சலி குறிப்பை எழுதியவர் தோழர் கே.இராமச்சந்திரன் .அரசரடி தலைமை அஞ்சலகத்தில் APM(Accounts) ஆக பணி நிறைவு செய்தார்.தோழர் டி. ஞானையா அவர்களால் தொழிற்சங்க காந்தி என அன்புடன் அழைக்கப்பட்டவர். இராமநாதபுரம் , சிவகங்கை கோட்டங்களில் சிறந்த தொழிற்சங்கவாதிகள் பலரை  உருவாக்கியவர். இப்போது மதுரையில் வசித்து வருகிறார். அஞ்சல் RMS பகுதி  மதுரை மண்டலத்தின் அஞ்சல் ஓயவூதியர் சங்கத்தின் தலைவராக பணி செய்கிறார்.

 தோழர் D. ஞானையா தோற்றம் :07.01.1921, மறைவு : 08.07.2017 . இன்று ( 08.07.2018) அவருக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி தினம்- 

 இந்திய தபால் தந்தி ஊழியர் தொழிற்சங்க வரலாற்றில் சிறப்பான முத்திரை பதித்த முன்னணித் தலைவர் தோழர் D. ஞானையா அவர்கள் தனது 97வது வயதில்  08.7.2017 அன்று கோவையில் காலமானார்.

 இன்று ( 08.07.2018 )அவருக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி தினமாகும்

 தோழர் டி.ஜி  ஒரு பன்முகத் திறமையாளர். 

 தொட்ட துறைகளிலெல்லாம் உச்சத்தை அடைந்தவர்.  தமிழ்,
ஆங்கிலம், இந்தி மொழிகளில் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்.  அரசியலில் முன்னிலைத்தலைவர். மிகச்சிறந்த சிந்தனையாளர்,
வரலாற்று ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளர்.

 தொழிற்சங்கத்தில் அவரின் பங்கு. 

  தோழர் D. ஞானையா அவர்கள் ஒன்றுபட்ட தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றிவர்.  1950ல் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவை உள்ளடக்கிய யூனியன் ஆப் போஸ்ட்ஸ் அண்ட் டெலிகிராப்ஸ் ஒர்க்கர்ஸ் (UPTW) சங்கத்தின் மாநில துணை செயலாளராக பணியாற்றினார். 
NFPTE ன் திருச்சி மாவட்டத்தில் செயலாளராக, அதன் தலைவராக, மாநில அமைப்புச் செயலாளராக, மாநில தலைவராக,அகில இந்திய துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

 1960ம் ஆண்டு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம். 

1960ம் ஆண்டு ஜீலையில் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை திருச்சியில் தலைமையேற்று நடத்தினார்.  அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவித்த போதும் இலாகா மீண்டும் அவரை பணி இடை நீக்கம் செய்து விசாரணை நடத்தியது.  விசாரணை திருச்சியில் இல்லாமல் புதுக்கோட்டையில் போலீஸ் காவலுடன் நடத்தப்பட்டது.  இவர் வேலை நிறுத்தத்தினை தலைமையேற்று நடத்தியதை ஒப்புக்கொண்டார்.  இலாகா இறுதியில் இவரை பணி நீக்கம் (Dismissal) செய்தது.  14 மாதங்கள் கழித்து மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 1968 செப்டம்பர் 19 அன்று மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம். 

1963ல் ஒன்றுபட்ட NFPTE சம்மேளனத்தின் செயலாளராகவும், 1965 முதல் 1970 வரை சம்மேளன மாபொதுச் செயலாளராகவும் (Secretary General)  பணியாற்றினார். 1966ம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டு ஆலோசணைக் குழு (JCM) அமைந்திட அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அந்த அமைப்பினை ஒரு அர்த்தமுள்ள அமைப்பாக உருவாக்கிட உதவினார்.  அந்த அமைப்பின் விதிகளை மீறி அரசு உடன்பாடு ஏற்படாத பிரச்சனைகளை நடுவர் மன்றத்தின் தீர்ப்பிற்கு எடுத்துச்செல்ல மறுத்ததால் 1968 செப்டம்பர் 19 அன்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது.  தபால் தந்தி ஊழியர்களின் ஒன்றுபட்ட NFPTEசம்மேளனத்தின் செக்ரட்டரி ஜெனரலாக இருந்த மோழர் டி. ஞானையா அவர்கள் தபால் தந்தி பகுதியில் போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார்.  முந்தைய நாள் இரவு கைது செய்யப்பட்டு டெல்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 
தபால் தந்தி பகுதியில் போராட்டம் முழு வெற்றி அடைந்தது. 
பழிவாங்குதல் அதிகமாக இருந்தது.  சம்மேளன அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
விதிப்படி வேலை மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின்மூலம் பழிவாங்குதல்,
சம்மேளன அங்கீகார ரத்து போன்றவற்றை துடைத்து இயல்பு நிலைக்கு தபால், தந்தி பகுதியினை கொணர்ந்தார்.

 சோதனைகளும் சாதனைகளும் 

            NFPTE சங்கத்தில் 1971 முதல்1975 வரை இரு அணியாக இருந்த பிளவு நீங்கி 1976 ல் மீண்டும் ஒன்றுபட்ட நிலையில் NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக பம்பாயில் INTUC தலைவர் திரு. N.K. பட் அவர்கள் தலைமையில் கூடிய சம்மேளன குழுவில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரம்.  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இவரை செயல்பட விடாமல் அரசு பல்வேறு தாக்குதல்களை இவர் மீது தொடுத்தது.  CL உட்பட அனைத்து விடுமுறைகளும் அவருக்கு மறுக்கப்பபட்டன.  ஒரு நாள் CL கொடுத்த கோவை HO. அஞ்சல் அதிகாரி இரவோடு இரவாக  மாற்றப்பட்டார்.  ஏற்றுக்கொண்ட பொறுப்பினை  செம்மையாக செயலாற்றிட வேறு வழியின்றி இவர் விருப்ப ஓய்விற்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டு  (Leave preparatory to retirement)ல் ஓய்விற்கு முந்தைய விடுமுறையில் சென்று சங்கபணியாற்றினார்.  இந்த காலகட்டத்தில் இவரை ஆசிரியாராக கொண்டு வெளிவந்த NFPTE சம்மேளனத்தின் சங்க ஏடு “ The P&T Labour “  அரசால் கைப்பற்றப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

 1977ல் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி காரணமாக ஜனதா அரசு பதவிக்கு வந்தது.  இயல்பு நிலை திரும்பியது.  அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த திரு. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்கள் இவரது விருப்ப ஓய்வினை  இரத்து செய்து பணியில் தொடர அனுமதித்தார்.  தபால் தந்தி ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் பெறப்பட்டது. JCM ஊழியர் தரப்பு தலைவராக இருந்த தோழர் டி. ஞானையா அவர்களும் அரசு தரப்பில் மெம்பர்  PO ஆக இருந்த திரு. ஏ. சுவாமிநாதன் அவர்களும் போனஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  1978 வரை இவர் தொடர்ந்து சம்மேளன பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு  சாதனைகளை புரிந்தார். 1979 ஜனவரியில்  இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.  தோழர் ஞானையா சம்மேளன பொறுப்பில் இருந்த காலத்தில் அனைத்து கருத்தோட்டம் கொண்ட தலைவர்களையும்  ஊழியர்களையும் இணைத்து ஒருமித்த கருத்தினை உருவாக்கி அதன் அடிப்படையிலேயே செயலாற்றினார் என்பது இவரது தனிச்சிறப்பு.  ஓய்விற்கு பின்பும் இவர் 2006ம் ஆண்டு வரை ஊழியர் தரப்பு பிரதிநிதியாக நடுவர் தீர்ப்பு வாரியத்தில் (Board of arbitration) 8 ஆண்டுகள் பணியாற்றினார்.  சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தகாலகட்டங்களில் வெவ்வேறு நாட்டு தொழிற்சங்க அமைப்புகளின் அழைப்பின் பேரில் அந்த நாடுகளுக்கு பயணித்து சர்வதேச அரங்குகளில் உரையாற்றியும், தலைமை பாத்திரம் ஏற்றும் தபால் தந்தி ஊழியர்களுக்கு பெருமை சேர்த்தார்.  பணியில் இருந்த காலத்தில் இவர் மூன்று முறை கைது செய்யப்பட்டும், மூன்று முறை பணி இடை நீக்கம் செய்யப்பட்டும், ஒரு முறை பணி நீக்கமும், ஒரு முறை கட்டாய விருப்ப ஓய்விலும் அனுப்பப்பட்டுள்ளார் என்பது இவரது உறுதியான தொழிற்சங்க தலைமைக்கு எடுத்துக்காட்டாகும்.

 அரசியல் பணி. 

   ஓய்விற்கு பின்பு இவர் முழு நேர அரசியல் பணியாற்றினார்.  இவர் சார்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினராக  எட்டு ஆண்டுகளும்,  நிர்வாக குழு உறுப்பினராக 25 ஆண்டுகளும்,மாநில கட்டுப்பாட்டு குழு தலைவராக10 ஆண்டுகளும், மத்தியில் தேசிய குழு உறுப்பினராக 10 ஆண்டுகளும் இருந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்.  இந்த காலகட்டத்தில் இவர் பல்வேறு விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று பல முடிவுகளுக்கு காரணியாக செயல்பட்டுள்ளார்.  இவரை தெரியாத, இவருக்கு தெரியாத அரசியல் தலைவர்கள் மிகவும் குறைவு.

 எழுத்துப்பணி. 

            அரசியல் பயணத்தை தொடர்ந்து எழுத்துப் பணியில் கவனத்தை செலுத்தினார்.  உலகின் பல மூலைகளிலிருந்தும்  அரிய வகை நூல்கள் பலவற்றை தருவித்தும் உலகின் புகழ் மிக்க நூலகங்கள் பலவற்றிற்கு நேரடியாக சென்று கற்றும், ஆய்ந்தும் பல்வேறு நூல்களை வெவ்வேறு பொருள்களில் எழுதியுள்ளார்.  அவர் நூல்களில் உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஆழமாக விவாதித்துள்ளார்.  அதற்கு தீர்வுகளும் தந்துள்ளார். மார்க்சிய சித்தாந்தம், உலக வரலாற்று போக்கு பற்றிய இவரது புரிதலும், வியாக்கியானங்களும் கற்றோர் உலகில் பெரும் வியப்பினையும் பாராட்டையும் பெற்றுள்ளது.  இதுவரை 30க்கும் மேற்பட்ட புத்தகங்களும், சிறு பிரசுரங்களும்,நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  இவர் எழுதி இவர் மறையும் சில நாட்களுக்கு முன்பாக சர்வதேச பப்ளிஷர்களால் வெளியிடப்பட்ட சுமார் 800 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூல் “An Alternative History of India” என்பதாகும்.  கடைசியாக எழுதிக்கொண்டிருந்த கம்யூனிச இயக்க வரலாறு  என்ற  நூல் முற்றுப்பெறாமல் உள்ளது.  பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர் திருமிகு.V.Rகிருஷ்ணய்யர் அவர்கள் சுமார் 400பக்கங்கள் கொண்ட இவரது “Terrorisms, Sources & Solutions” நூலை முழுமையாக படித்து விட்டு எழுதிய அணிந்துரையில்‘திரு.ஞானையாவின் நூலைப் படிக்காமல் நீங்கள் உலகத்தை முழுமையாக அறிந்துகொள்ளவே இயலாது” என்று குறிப்பிடுகின்றார்.  இது ஒன்றே தோழர் டி. ஞானையா அவர்களது ஆய்வாற்றாலை எடுத்துக்காட்ட போதுமானது.  இவரது மற்றொரு படைப்பான “Obama’s of America and Dalits of India”(Saga of Two Black Peoples) நூலுக்கு அயோத்திதாசர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மாமனிதருக்கு நமது வீர வணக்கமும், 

அஞ்சலியும்.

            இவரது ஆழ்ந்த சிந்தனை,நுண்ணிய அறிவாற்றல், அபாரமான  நினைவாற்றல்,

வியத்தகு மனித நேயப்பண்பு, விவாதம் மற்றும்ஆய்வுத் திறன் போன்றவற்றில் இவருக்கு சமமானவர்கள் ஒரு சிலரே இருக்கக்கூடும்.


  இத்துணை ஆற்றல் பெற்ற தலைவர் தோழர் டி. ஞானையா,அரசியல் உச்சபட்ச தலைவர்கள்,தொழிற்சங்க பிரபலங்கள் அனைவரிடமும் நேரடியான தொடர்பும், நட்பும் கொண்டிருந்த போதும், தொண்டர்களிடமும் அதே அளவு அன்பும், பாசமும் காட்டி பயணித்தே வந்தார்.  இது மிகவும் போற்றத்தக்க பண்பாகும்.  இத்தகு பன்முகத்தன்மை கொண்ட மாமனிதர் தனது 97வது வயதில் காலமானர் என்ற போதும் அவரது மறைவினை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  அம் மாமனிதருக்கு நமது வீர வணக்கத்தையும்,அஞ்சலியினையும் தெரிவிப்பதோடு,அவர் நினைவைப் போற்றிடுவோம்.

RED SALUTE COM. D. GNANIAH

இவண்

கே, இராமச்சந்திரன், Postal Pensioners Association, மதுரை  

Tuesday, May 01, 2018

மகாகவி பாரதியின் வரிகளில் மேதின அறைகூவல்


                    மேதினம் -  01.05.2018    
தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பின் பெருமையை மகத்துவத்தை போற்றிய மகாகவி பாரதியின் வரிகளில் மேதின அறைகூவல்

தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவன் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு என்றால்  அப்படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறான் அவன்  . 

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"

 இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் உங்களுக்கு எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை 


"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !" 
என தொழிலாளர்களை நோக்கி பாடல் இசைக்கிறான்..

                     விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "

அது மட்டுமா “.தொழிலாளர்களே! நீங்கள் தான் நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்கள்  , மக்கள் விரும்பும்  இன்பத்தை தருபவர்கள்”.  எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .

Bharathi on Workers

நாட்டில் அறம் கூட்டி வைப்பீரே .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே

தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .

பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

 அது மட்டுமா . " உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .

இரஷியாவில் மாமேதை லெனின் தலைமையில் புரட்சி நடந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததை வரவேற்று பாடிய மகாகவி பாரதி

"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".

என்று ஆனந்த கூத்தாடுகிறான். .பாரதி தனி   ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் அல்லவா . எனவே .கொடுமை கண்டு கொதிநிலை அடைந்த  அவன் .வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான்.எனவேதான் "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்து பாடுகிறான். ."உலகத்துக்கு ஓர் புதுமை" என அப்புரட்சியைப்  பறை சாற்றுகிறான். .உலகம் முழுதும் அப்புரட்சி பரவ  ஏங்கி தவிக்கிகிறான். தொழிலாளர் தலைமையிலான ஆட்சியில் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான்

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை அடிமையாக்கியது வரலாற்று உண்மை.

மக்களுக்கான அரசு அல்ல இது கார்ப்போரட் களுக்கான அரசு :
ஆனால்  இப்போது வெளிநாட்டு ,உள்நாட்டு கார்ப்போரட் களுக்கு எல்லா சலுகைகளையும் அள்ளி வழங்கி வெண்சாமரம் வீசி வரவேற்கிறது மத்திய அரசு. உள்ளூர் தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது இப்போதைய மத்திய அரசு .

ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை .
மக்களை மத ரீதியாக மோதவிட்டு தனது வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் , பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை இந்த ஆட்சியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அஞ்சல் தொழிலாளிக்கு சி.எஸ்.ஐ  ரோல் அவுட் மூலம் மேலும் நெருக்கடி:
அஞ்சல் துறையில் ஏற்கெனவே ஊழியர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர் .. சி.எஸ்.ஐ  ரோல் அவுட் மூலம் நெருக்கடி இன்னும் அதிகரித்துள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டக்குரல் அரசின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாக உள்ளது . கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஊதியக் குழு அறிக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கப் படுகிறது. அரசுக்கு ஊழியர் மீதான அக்கறை ஏதுமில்லை


தொழிலாளி வர்க்கமே அறத்தை மீட்டெடுக்கும் வல்லமை பெற்றவர்கள்:
அதற்கு காரணம் அறத்தை மீட்டெடுக்கும் வல்லமை பெற்ற இந்திய தொழிலாளர்கள் ஜாதி, மத ,அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் , அவர்களிடையே வர்க்க உணர்வு குறைந்து இருப்பதுவுமேயாகும் . எனவே மக்களை பிளவு படுத்தும் மதவாத கொள்கைகள், தொழிலாளர் விரோத கொள்கைகள் ," சிலர் வாழ, பலரை வாடவைக்கும்" மத்திய அரசின் பொருளாதரக் கொள்கைகள், போன்ற மோடி அரசின் கொள்கைகளை  எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமை நமக்கு மிக அவசியம்.

"ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை இந்த மே தினத்தின் போர் பரணியாகப் பாடி போராட்டப் பாதையில் பயணிப்போம் . வெற்றி நமதே.