மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, May 25, 2020

Greetings message for Ramzan 2020

Greetings message for Ramzan 2020


Due to Novel Corona virus Pandemic, Ramzan is different this time. No traditional celebration with much fanfare. There are no iftar gatherings . Prayer is confined  at homes only with family members instead in mosques with a large gathering. 

Despite all these things , the core  principle  for celebration of Ramzan remains intact .As usual , fasting during Ramzan makes one to commit  help the poor and the needy during the lockdown.

 As a powerful symbol of unity , Ramzan gives hope that the humanity will win over the Pandemic and march ahead spreading love and  kindness among the  fellow human beings.

Happy and prosperous Ramzan to you and all family members. Ed Mubarak.

...P.Sermuga Pandian
Madurai

Saturday, May 02, 2020

மேதின செய்தி 2020

*மேதின வாழ்த்துக்கள் - 2020* 
       
.அமெரிக்காவின் சிக்காகோவின் நகரில் தொழிலாளி வர்க்கம் போராடி சிந்திய ரத்தத்தில் நாம் பெற்ற உரிமை தான் எட்டுமணி நேர வேலை நேரம் காலம் ஏதுமின்றி தொழிலாளர்களை கசக்கி  பிழிந்து வந்த முதலாளிகளின் கொடுமையை இப்போராட்டமே முடிவுக்கு கொண்டு வந்தது .எட்டுமணி நேர வேலை உரிமையானது. ஆனால் சோவியத் யூனியன் சரிவுக்கு பின்னர் வேர்விட்ட உலகமயம் ,தனியார்மயம் தாராளமயம் போன்ற கொள்கைகள் எட்டு மணி நேர வேலை என்ற தொழிலாளர்  உரிமைக்கு சாவுமணி அடித்துள்ளது .

பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் இந்திய தொழிலாளி வர்க்கம் ரத்தம்  சிந்திப்  போராடிப்  பெற்ற  உரிமைகளும்,  சலுகைகளும் ஏராளம்.    அவை தொழிலாளர் நலம் காக்கும் சட்டங்களாக அமையப் பெற்றுள்ளன.  அம்மாதிரி உள்ள 44 சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை   
1. Industrial Disputes Act 1927 (தொழிற் தகராறு சட்டம் ) 
2. Trade Union Act 1927 ( தொழிற் சங்க சட்டம்) 
3. Minimum Wages Act 1948 ( குறைந்த பட்ச கூலி சட்டம் )
4. Bonus Payment Act 1965 ( போனஸ் பட்டுவாடா   சட்டம்)
இந்த சட்டங்களே  தொழிலாளர்களின் பாதுகாப்பு  அரணாக விளங்குகின்றன. "Ease of doing Business" என்ற பெயரில் அதாவது "முதலாளிகள் தொழில் செய்வதை எளிமையாக்க" தொழிலாளர்களின் பாதுகாப்பையும், தொழிற்சங்க உரிமைகளையும் காவு தர முடிவு செய்த  பி.ஜே பி யின் *மோடி தலைமையிலான மத்திய அரசு “தொழிலாளர்கள்  நல சீர்திருத்தம்” என்று சொல்லி 44 Acts (சட்டங்களை) 4 லேபர் கோடுகளாக ( Labour Codes) சுருக்கி விட்டது அவை.

 1..Labour Code on  Industrial Relations Code, 2019
2 Labour Code on Wages, 2019
3.Labour Code on Social Security, 2019 
4.Labour Code on Occupational Safety, Health and Working Conditions Code, 2019

தொழிற்சாலைகள்    உள்ளிட்ட  பெரு  நிறுவனங்களில்  பணிசெய்யும்  75 % உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட சங்கங்களுக்கு மட்டுமே இனி தொழிற்சங்க அங்கீகாரம்  தரப்படும்.  அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கும்  தொழிலாளர்களின் 75% ஆதரவு பெற்ற     அங்கீகாரம்  பெற்ற     தொழிற்சங்கமாக     செயல்படுவது  இனி  எந்த அமைப்பிற்கும் சாத்தியமில்லை.  தொழில் செய்வதை  எளிமையாக்குகிறோம்  என்று சொல்லும்    அரசின்    தீய  நோக்கமே    தொழிலாளர்களின்  பாதுகாப்பை  சீர்கேடு செய்வதும்      தொழிற்சங்கங்களை   முடக்குவதும்      தான்      என்பதை   நாம் உணரவேண்டும்.  இதுபோன்ற  தொழிற் சங்க சீர்கேடு  சட்டங்களை மத்திய  மாநில அரசு   ஊழியருக்கும் நீட்டித்தால்   அரசு   ஊழியர்   நலம் காக்க   தொழிற் சங்கம் நடத்துவதே      மிகச்  சிக்கலாகி  விடும்.    

எனவே,    இதுகாறும்    போராடிப்  பெற்ற உரிமைகளைப் பறிக்கும்  Labour Code களை மத்திய அரசு  திரும்ப பெற செய்ய மீண்டும் ஒரு வலிமைமிக்க போராட்டத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் இறங்க வேண்டிய அவசியத்தை தொழிற்சங்கங்களும் அவை சார்த்த தொழிலாளர்களும் இந்த மேதினத்தில் உணரவேண்டும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துகிறோம்  என்று சொல்லி எந்த வித திட்டமுமின்றி மத்திய மாநில அரசுகள் அறிவித்த லாக்டவுனால்  கோடிக்கணக்கான தொழிலாளர்கள்   வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .  லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த பேரிடர் காலத்தில்எவ்வித  பொருளாதர உதவிகளையும்  மத்திய  அரசு செய்யவில்லை  . மேலும் மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களின் DA  வை முடக்கிவைக்கப்பட்டுள்ளது  . ஆனால் பெருமுதலாளிகள்  வங்கிகளிடம் பெற்ற  69000 கோடி  ரூபாயை தள்ளுபடி செத்துள்ளது  மத்திய அரசு .  அரசின்  கருணை முதலாளிகளுக்கே கிடைக்கிறது . தொழிலாளிகளின் மீது பாராமுகம் காட்டுகிறது  . 

 தொழிலாளர்கள்  இதுவரை போராடிப்பெற்ற உரிமைகளை மீட்டெடுக்கவும் , லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்கவும்  இந்த மேதினத்தில் தொழிலாளர்களும்  , தொழிற்சங்கங்களும்   இந்த 
 மே தினத்தில் சபதமேற்போம்

...ப.சேர்முக பாண்டியன்
முன்னாள் பி3 சங்க செயலர்
NFPE, SIVAGANGAI
@மதுரை

Friday, March 13, 2020

அச்சமில்லை அச்சமில்லை

Men are women's children and we mother them again

Men are women's children and we mother them again

1912ல் அமெரிக்காவிலுள்ள லாரன்ஸ் நகரில் நெசவு தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவாக  "எங்களுக்கு  ரொட்டியோடு ரோஜாக்களையும் கொடு" என்ற பதாகைகளை ஏந்தி பெண்கள் மிகப் பெரிய பேரணி நடத்தினர். எனவே அந்தப் போராட்டம் " *Bread and Roses strike* " என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பேரணியில் பெண்கள்  முழக்கிய கவிதையின் சில வரிகள் இதோ கீழே.

 As we come marching, marching, we battle, too, for men-

 For they are women's children and we mother them again

 Our lives shall not be sweated from birth until life closes

 Hearts starve as well as bodies; Give us Bread, but give us Roses!

எது புண்ணியம்


எது புண்ணியம் என்கிறான் மகாகவி பாரதி?  

அன்ன தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்குமா.? அன்ன தானம் செய்வதத்தெல்லாம் அந்த நேரத்தில் பசிப்போர்க்கு பசியை போக்கும். .அவ்வளவு தான். .ஆனால் ஒருவனுக்கு கல்வி தந்தால் அவனுக்கு மட்டுமல்ல அவன் தலைமுறைக்கே சோறுபோடும்.
எனவே ஏழை ஒருவனுக்கு தரும் கல்வியே உண்மையிலேயே புண்ணியம் தரும் செயல் என்கிறான் மகாகவி பாரதி.

Thursday, March 05, 2020

காதலின் புகழ் -- மகாகவி பாரதியார்


              காதலின் புகழ் -2
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங் கற்பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற்பு என்று உலகோர்  கதைக்கின்றாரே?
                         ----- மகாகவி பாரதியார்


                காதலின் புகழ்- 3
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழி செய்கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடர் எய்திக்  கெடுகின்றாரே
                         -----  மகாகவி பாரதியார்காதலின் புகழ்- மகாகவி பாரதியார்

                                       காதலின் புகழ்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
                                              மகாகவி பாரதியார் Tuesday, February 18, 2020

காதலர் தினம் -14.02.2020காதலர் தினம் 

தகவல் தொடர்பு  தொழில்நுட்பம் உச்சம் தொட்ட இந்த காலத்தில் , முதலாளித்துவத்தின்  விற்பனை சூழ்ச்சியின் ஒரு அங்கமாக இன்று காதலுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று காதல்  .அதற்கு விளம்பரம் எதுக்கு தேவை? . தனி மனிதர்களில் உணர்வில் விளையும் காதல் மீது ஏன் இந்த விளம்பர பூச்சு .  வணிகம் நோக்கமாக இருந்தாலும் இந்த கொண்டாட்டத்தையும்  ஏற்றுக் கொள்வதே சரியானதாகும்.இது கால மாற்றத்தின் விளைவு. யாரும் தடுக்க முடியாத ஒன்று

சங்க காலமாக இருந்தாலும் சரி இந்த நவீன காலமாக இருந்தாலும் சரி. மனித குலத்தில் காதல் உணர்வு என்றும் மாறாத ஒன்று . ஆனால் அதை அடைய துடிப்பவர்,அது ஆணோ பெண்ணோ , அவர்கள் கடைபிடிக்கும் நடை முறைகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல .கால வகையினானே" என்கிறது நன்னூல் சூத்திரம். "வழு அல"  என்றால் குற்றம் இல்லை என்று அர்த்தம் .மாற்றம் என்பது காலம் தரும் விந்தையான கொடை

.
"செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!செவ்விது செவ்விது காதல்! காதலினால்  உயிர் தோன்றும் - இங்கு காதலினால்  உயிர் வீரத்தில் ஏறும்! காதலினால்  அறிவெய்தும் - இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்".என்று காதலின் பெருமையை போற்றுகிறேன் மகாகவி பாரதி .

காதலே மனிதகுலத்தை நீடிக்கசெய்யும்  அற்புத சக்தி . அதை இன்று மட்டுமல்ல, என்றும் போற்றுவோம் காதலை . .காதல் வாழ்க என்று கூத்தாடுவோம்


Thursday, February 06, 2020

மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி அனைத்தும் படங்களாக

Image files of Mahakavi Bharathiyar's Puthiya Athisoodi 

மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
உயிர் வருக்கம்
1.  அச்சம் தவிர்
2.  ஆண்மை தவறேல்
3.  இளைத்தல் இகழ்ச்சி
4.  ஈகை திறன்
5.  உடலினை உறுதிசெய்
6.  ஊண்மிக விரும்பு
7.  எண்ணுவ துயர்வு
8.  ஏறுபோல் நட
9.  ஐம்பொறி ஆட்சிகொள்
10.         ஒற்றுமை வலிமையாம்
11.         ஓய்த லொழி
12.         ஒளடதங் குறை**

**ஒளடதம்  - மருந்து

பாரதியார் ஆத்திசூடி 1


மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
ககர வருக்கம்
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
19. கெடுப்பது சோர்வு
20. கேட்டிலும் துணிந்து நில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கவ்வியதை விடேல்பாரதியார் ஆத்திசூடி 2


மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
சகர வருக்கம்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்து செய்
32. சேர்க்கை அழியேல்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
36. சௌரியம் தவறேல்

பாரதியார் ஆத்திசூடி 3மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
ஞகர வருக்கம்
37. ஞமலிபோல் வாழேல்
38. ஞாயிறு போற்று
39. ஞிமிரென  இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
ஞமலி – நாய்,  ஞிமிர்- தேனீ ஞாயிறு- சூரியன்
ஞெகிழ்தல்- மனம் இளகுதல், ஞேயம்- நட்பு
பாரதியார் ஆத்திசூடி 4மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
தகர வருக்கம்
42. தன்மை இழவேல்
43. தாழ்ந்து நடவேல்
44. திருவினை வென்று வாழ்
45. தீயோர்க்கு அஞ்சேல்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
51. தொன்மைக்கு அஞ்சேல்
52. தோல்வியில் கலங்கேல்
53. தவத்தினை நிதம்புரி

பாரதியார் ஆத்திசூடி 5


மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
நகர வருக்கம்
54. நன்று கருது
55. நாளெல்லாம் வினை செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
61. நேர்ப்படப் பேசு
62. நையப் புடை
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்


பாரதியார் ஆத்திசூடி 6மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
பகர வருக்கம்
65. பணத்தினைப் பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
69. புதியன விரும்பு
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
72. பேய்களுக்கு அஞ்சேல்
73. பொய்மை இகழ்
74. போர்த்தொழில் பழகு

பாரதியார் ஆத்திசூடி 7

மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
மகர வருக்கம்
75. மந்திரம் வலிமை
76. மானம் போற்று
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்

அருஞ்சொல் விளக்கம்
மிடிமை- வறுமை
முனை- முனைப்பு, நுனி,  போர்முனை
முனையிலே முகத்து நில் என்றால் "எதற்கும் முனைப்புடன் முன்னால் வந்து நில்" என்று அர்த்தம்
மேழி- கலப்பை.
”மேழி போற்று”  என்றால் விவசாயத்தை போற்றி வளர்   என்று அர்த்தம்
மொய்ம்பு -வலிமை,செம்மை,முழு ஈடுபாடு
மோனம்- மௌனம்,ஆழ்ந்த சிந்தனை
மௌட்டியம்-அறியாமை


பாரதியார் ஆத்திசூடி 8

மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
யகர வருக்கம்

86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
சங்க இலக்கியங்களில் கிரேக்கர்கள் யவனர்
அழைக்கப்பட்டனர்
யௌவனம்- இளமை, அழகு
பாரதியார் ஆத்திசூடி 9


மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
ரகர வருக்கம்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
96. ரௌத்திரம் பழகு
ரஸம்- ரசனை, கலை இலக்கிய ரசனை
ராஜஸம்- ராஜஸ குணம், ஆற்றல், சக்தி
ரீதி- ஒழுங்கு முறை
ரூபம்- உருவம் வடிவம்
ரேகை- கோடு , வரைகோடு, முன்வரைவு 
கனி கொள் - பலன் பெறு
ரோதனம் -புலம்பல்
ரௌத்திரம்- கோபம், சினம்


பாரதியார் ஆத்திசூடி 10


மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
லகர வருக்கம்
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உலுத்தரை  இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
அருஞ்சொல் பொருள்
லவம்- சிறு துளி
லாவகம்  - நளினம்,அனாயாசம், , சாமர்த்தியம்
லீலை இவ்வுலகு - பூகம்பம் புயல் சுனாமி போன்ற இயற்கையின் லீலைகளால் ஆனதே   இவ்வுலகம்
உலுத்தர்- கஞ்சன் அற்பன் ,பிறருக்கு பயனற்றவன்
லௌகீகம் - உலகியல் கடமைகள்


பாரதியார் ஆத்திசூடி 11

மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி
வகர வருக்கம்
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்
105. விதையினைத் தெரிந்திடு
106. வீரியம் பெருக்கு
107. வெடிப்புறப் பேசு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்
110.வௌவுதல் நீக்கு
அருஞ்சொல் பொருள்
வீரியம்- வலிமை திடம்
வையம்- உலகம்
வௌவுதல்- பிறர் பொருளை அபகரித்தல்,
கவர்தல்
பாரதியார் ஆத்திசூடி 12

மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி


மகாகவி பாரதியின்
புதிய ஆத்திசூடி


 1. அச்சம் தவிர்
 2. ஆண்மை தவறேல்
 3. இளைத்தல் இகழ்ச்சி
 4. ஈகை திறன்
 5. உடலினை உறுதிசெய்
 6. ஊண்மிக விரும்பு
 7. எண்ணுவ துயர்வு
 8. ஏறுபோல் நட
 9. ஐம்பொறி ஆட்சிகொள்
 10. ஒற்றுமை வலிமையாம்
 11. ஓய்த லொழி
 12. ஒளடதங் குறை
 13. கற்ற தொழுகு
 14. காலம் அழியேல்
 15. கிளைபல தாங்கேல்
 16. கீழோர்க்கு அஞ்சேல் 
 17. குன்றென நிமிர்ந்துநில்
 18. கூடித் தொழில் செய்
 19. கெடுப்பது சோர்வு
 20. கேட்டிலுந் துணிந்து நில்
 21. கைத்தொழில் போற்று
 22. கொடுமையை எதிர்த்துநில்
 23. கோல்கைக் கொண்டு வாழ்
 24. கவ்வியதை விடேல்
 25. சரித்திரத் தேர்ச்சி கொள்
 26. சாவதற்கு அஞ்சேல்
 27. சிதையா நெஞ்சுகொள்
 28. சீறுவோர்ச் சீறு
 29. சுமையினுக்கு இளைத்திடேல்
 30. சூரரைப் போற்று
 31. செய்வது துணிந்து செய்
 32. சேர்க்கை அழியேல்
 33. சைகையிற் பொருளுணர்
 34. சொல்வது தெளிந்து சொல்
 35. சோதிடந்தனை யிகழ்
 36. சௌரியந் தவறேல்
 37. ஞமலிபோல் வாழேல்
 38. ஞாயிறு போற்று
 39. ஞிமிரென இன்புறு
 40. ஞெகிழ்வது அருளின்
 41. ஞேயங் காத்தல்செய்
 42. தன்மை இழவேல்
 43. தாழ்ந்து நடவேல்
 44. திருவினை வென்றுவாழ்
 45. தீயோர்க்கு அஞ்சேல்
 46. துன்பம் மறந்திடு
 47. தூற்றுதல் ஒழி
 48. தெய்வம் நீ என்றுணர்
 49. தேசத்தைக் காத்தல் செய்
 50. தையலை உயர்வு செய்
 51. தொன்மைக்கு அஞ்சேல்
 52. தோல்வியிற் கலங்கேல்
 53. தவத்தினை நிதம் புரி
 54. நன்று கருது
 55. நாளெலாம் வினைசெய்
 56. நினைப்பது முடியும்
 57. நீதிநூல் பயில்
 58. நுனியளவு செல்
 59. நூலினைப் பகுத்துணர்
 60. நெற்றி சுருக்கிடேல்
 61. நேர்படப் பேசு
 62. நையப் புடை
 63. நொந்தது சாகும்
 64. நோற்பது கைவிடேல்
 65. பணத்தினைப் பெருக்கு
 66. பாட்டினில் அன்புசெய்
 67. பிணத்தினைப் போற்றேல்
 68. பீழைக்குஇடங்கொடேல்
 69. புதியன விரும்பு
 70. பூமி இழந்திடேல்
 71. பெரிதினும் பெரிதுகேள்
 72. பேய்களுக்கு அஞ்சேல்
 73. பொய்ம்மை இகழ்
 74. போர்த்தொழில் பழகு
 75. மந்திரம் வலிமை
 76. மானம் போற்று
 77. மிடிமையில் அழிந்திடேல்
 78. மீளுமாறு உணர்ந்து கொள்
 79. முனையிலே முகத்து நில்
 80. மூப்பினுக்கு இடங்கொ டேல்
 81. மெல்லத் தெரிந்து சொல்
 82. மேழி போற்று
 83. மொய்ம்புறத் தவஞ்சொய்
 84. மோனம் போற்று
 85. மௌட்டியந் தனைக்கொல்
 86. யவனர்போல் முயற்சி கொள்
 87. யாவரையும் மதித்து வாழ்
 88. யௌவனம் காத்தல் செய்
 89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
 90. ராஜஸம் பயில்
 91. ரீதி தவறேல்
 92. ருசிபல வென்றுணர்
 93. ரூபம் செம்மைசெய்
 94. ரேகையில் கனிகொள்
 95. ரோதனம் தவிர்
 96. ரௌத்திரம் பழகு
 97. லவம் பல வெள்ளமாம்
 98. லாகவம் பயிற்சிசெய்
 99. லீலை இவ் வுலகு
 100. (உ)லுத்தரை இகழ்
 101. (உ) லோக நூல் கற்றுணர்
 102. லௌகிகம் ஆற்று
 103. வருவதை மகிழ்ந்துண்
 104. வானநூற் பயிற்சிகொள்
 105. விதையினைத் தெரிந்திடு
 106. வீரியம் பெருக்கு
 107. வெடிப்புறப் பேசு
 108. வேதம் புதுமைசெய்
 109. வையத் தலைமைகொள்
 110. வௌவுதல் நீக்கு