மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, March 13, 2020

அச்சமில்லை அச்சமில்லை

Men are women's children and we mother them again

Men are women's children and we mother them again

1912ல் அமெரிக்காவிலுள்ள லாரன்ஸ் நகரில் நெசவு தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவாக  "எங்களுக்கு  ரொட்டியோடு ரோஜாக்களையும் கொடு" என்ற பதாகைகளை ஏந்தி பெண்கள் மிகப் பெரிய பேரணி நடத்தினர். எனவே அந்தப் போராட்டம் " *Bread and Roses strike* " என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பேரணியில் பெண்கள்  முழக்கிய கவிதையின் சில வரிகள் இதோ கீழே.

 As we come marching, marching, we battle, too, for men-

 For they are women's children and we mother them again

 Our lives shall not be sweated from birth until life closes

 Hearts starve as well as bodies; Give us Bread, but give us Roses!

எது புண்ணியம்


எது புண்ணியம் என்கிறான் மகாகவி பாரதி?  

அன்ன தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்குமா.? அன்ன தானம் செய்வதத்தெல்லாம் அந்த நேரத்தில் பசிப்போர்க்கு பசியை போக்கும். .அவ்வளவு தான். .ஆனால் ஒருவனுக்கு கல்வி தந்தால் அவனுக்கு மட்டுமல்ல அவன் தலைமுறைக்கே சோறுபோடும்.
எனவே ஏழை ஒருவனுக்கு தரும் கல்வியே உண்மையிலேயே புண்ணியம் தரும் செயல் என்கிறான் மகாகவி பாரதி.

Thursday, March 05, 2020

காதலின் புகழ் -- மகாகவி பாரதியார்


              காதலின் புகழ் -2
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங் கற்பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற்பு என்று உலகோர்  கதைக்கின்றாரே?
                         ----- மகாகவி பாரதியார்


                காதலின் புகழ்- 3
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழி செய்கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடர் எய்திக்  கெடுகின்றாரே
                         -----  மகாகவி பாரதியார்



காதலின் புகழ்- மகாகவி பாரதியார்

                                       காதலின் புகழ்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
                                              மகாகவி பாரதியார்